Wednesday, November 26, 2008

136. இருளிலும் படித்திடும் வர்ணக்கவிதை - காதல்!

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல். சின்னத்திரை முலமாக நமக்கு மிகவும் அறிமுகமான ஜேம்ஸ் வசந்தனின் இன்னொரு முகத்தை நாம் அறியச்செய்த திரைப்படம் இது, குறிப்பாக இப்பாடல். இந்தப் பாடல் முழுவதும் வியாபித்திருப்பவர் அவர்தான். பாடல் காட்சிகள் மனத்திலேயே நிற்கின்றன. முதல் திரைப்படத்தை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தந்த இயக்குநர் சசிகுமாரின் தைரியத்தைப் பாராட்டலாம். எனக்குப் பிடித்த வரிகள்,
'இரு
கண்கள் எழுதும் ஒரு
வர்ணக்கவிதை காதல் தானா? ஒரு
வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை
இருளிலும் படித்திட முடிகிறதே!'
'உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்'

----------------------------------
படம் : சுப்ரமணியபுரம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
வரிகள் : ?
குரல் : பெல்லி ராஜ், தீபா மரியம்

----------------------------------

ஆ:
கண்கள் இரண்டால் உன்
கண்கள் இரண்டால் என்னைக்
கட்டி இழுத்தாய் இழுத்தாய் - போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு
கள்ளச் சிரிப்பில் என்னைத்
தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

(கண்கள்)

பெ:
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதுமென நான் நினைத்தே நகர்வேன்
ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு
வர்ணக்கவிதை காதல் தானா? ஒரு
வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை
இருளிலும் படித்திட முடிகிறதே!

ஆ:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?
பெ:
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே!
மறுபுறம் நாணமும் தடுக்குதே!
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
(கண்கள்)

பெ:
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ:
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர

ஆ:
கண்கள் இரண்டால் உன்
கண்கள் இரண்டால் என்னைக்
கட்டி இழுத்தாய் இழுத்தாய் - போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு
கள்ளச் சிரிப்பில் என்னைத்
தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பெ:
கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு
வர்ணக்கவிதை காதல் தானா? ஒரு
வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை
இருளிலும் படித்திட முடிகிறதே!
ஆ:
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதுமென நான் நினைத்தே நகர்வேன்
ஏமாற்றி
பெ:
கண்கள் இரண்டால் உன்
கண்கள் இரண்டால் என்னைக்
கட்டி இழுத்தாய் இழுத்தாய் - போதாதென
ஆ:
சின்னச் சிரிப்பில் ஒரு
கள்ளச் சிரிப்பில் என்னைத்
தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

Friday, November 23, 2007

135. ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே!

இப்போதெல்லாம் ஊடகங்களில் கேட்க முடியாத பல பாடல்களில் இதுவும் ஒன்று. என்ன ஒரு லாவகமான மெட்டு! வாலியின் வரிகளில், ஜேசுதாஸின் குரலில் இன்னும் மெருகேறியிருக்கிறது பாடல். 'தந்தையும் தாயும்' எனத் தொடங்கி 'மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட' எனும் வரையிலான மெட்டை நான் மிகவும் ரசித்தேன்.
------------------------------------------
படம் : வருஷம் 16
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஓ!....ஓ!
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
(நான்)
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நான் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நான் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே!
(பழமுதிர்)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே?
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை - என்றும்
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போலெங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்)

Monday, November 05, 2007

134. கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்!

சமீப காலங்களில், நான் பார்க்கவும் கேட்கவும் மிக விரும்புகின்ற ஒரு பாடல் இது. அழகான சந்தம், வார்த்தைகளைக் காயப்படுத்தாத பின்னணி இசை என்று மயக்குகிறார் யுவன். தமிழ்த்திரையிசையுலகின் தற்போதைய வெற்றிக்குதிரை இவரே! நா.முத்துக்குமார் தன்னை ஒவ்வொரு பாடலிலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். இந்தப் பாடுபொருள் இப்போது வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்று! கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் நா.முத்துக்குமார். இந்தப் பாடலை இதைவிட அழகாகப் படமாக்க முடியாது எனும்படிச் செய்திருக்கிறார்கள் வசந்த் மற்றும் குழுவினர். சுட்டிக்குழந்தைகள் பாடலின் அழகம்சம். ஷங்கர் மகாதேவன், பிருத்வி ராஜ் பாடலின் சிறப்பம்சங்கள். எனக்குப் பிடித்த வரிகள்,
"எப்போதும் இவன் மீது பால்வாசனை,
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை?"

"கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்!"
----------------------------------------------
படம் : சத்தம் போடாதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : ஷங்கர் மகாதேவன்
----------------------------------------------
அழகுக்குட்டிச் செல்லம் உன்னை
அள்ளித்தூக்கும்போது, உன்
பிஞ்சு விரல்கள் மோதி - நான்
நெஞ்சம் உடைந்து போனேன்.
ஆளைக் கடத்திப்போகும் உன்
கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் - நான்
திரும்பிப் போகமாட்டேன்.
அம்மு நீ...! என் பொம்மு நீ...!
மம்மு நீ! என் மின்மினி!
உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியலை
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை!
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு?
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி?

ஜிஞ்சனிஞ்ச ஜிஞ்சனிஞ்ச ஜிஞ்சனி,
மஞ்சனிஞ்ச மஞ்சனிஞ்ச மஞ்சனி
(அழகு)
ரோஜாப்பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்.
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தகதிமிதா ஜதி பேசும்.
எந்த நேரம் ஓயாத அழுகை!
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை?
எப்போதும் இவன் மீது பால்வாசனை,
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை?
எந்த நாட்டைப்பிடித்துவிட்டான்
இப்படி ஓர் ரட்டினக்கால் தோரணை! தோரணை!
(ஜிஞ்ச)
(அழகு)
நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்.
நீ சிணுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்.
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழந்தபடி நீ ஓட்டிப் போவாய்!
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்,
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்!
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி
ஓடுகின்ற கண்ணனே!
புன்னகை மன்னனே!
(ஜிஞ்ச)
(அழகு)

Monday, August 13, 2007

133. புரியாத ஆனந்தம்!

இலேசாக இருள் படர்ந்த ஒளியில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல், காதல் உணர்ச்சி மேலிடும் பெண்மையின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. S.ஜானகியின் குரல் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான். எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவர் பாடும் அழகே அழகு! இசையும், வரிகளும் கூட இரம்மியமாக இருக்கின்றன. அனுபவம் என்பது அதிகமில்லாத நிலையிலேயே இப்படி ஒரு படத்தைத் தந்த மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
-------------------------------------------
படம் : மௌனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : ஜானகி & குழு
-------------------------------------------
பெ:
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன்மொட்டு நானா? நானா?
(சின்ன)
பெ:
மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்றை நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி,
கு:
ம்....ம்....ம்.....
பெ:
மஞ்சம் தேடி
கு:
ம்.....ம்....ம்......
பெ:
மாலை சூடி,
கு:
ம்....ம்....ம்.....
பெ:
மஞ்சம் தேடி
கு:
ம்...ம்....ம்......
பெ:
காதல் தேவன் சந்நிதி காண..காணக்காண...காண
(சின்ன)
பெ:
மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக்கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக்கண்டேன்
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே!
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே!
காலம் தோறும்
கு:
ம்.....ம்.....ம்....
பெ:
கேட்க வேண்டும்
கு:
ம்....ம்......ம்....
பெ:
காலம் தோறும்
கு:
ம்.....ம்.....ம்....
பெ:
கேட்க வேண்டும்
கு:
ம்....ம்......ம்....
பெ:
பருவம் என்னும் கீர்த்தனம் பாட..பாடப்பாட...பாட...
(சின்ன)

132. தென்றல் தொட்டதும் தூக்கம் போனது

முட்டம் மண்ணில் ஒரு மாலை நேரத்தை ரசித்துக்கொண்டிருந்தபோது மனமெல்லாம் வியாபித்திருந்த சந்தோஷத்திற்குக் காரணமாக அமைந்தவற்றில் ஒரு விஷயம் பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகள் உருவான மண் அது என்பது. மனதை நெகிழ வைக்கும் திரைப்படங்களை உருவாக்கும் வல்லமை படைத்தவர் பாரதிராஜா எனும் சின்னச்சாமி. இளையராஜா, வைரமுத்து இருவரும் காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜானகியின் குரலும் அருமை.
-----------------------------------------------------
படம் : கடலோரக்கவிதைகள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : இளையராஜா & S.ஜானகி
-----------------------------------------------------
பெ:
அடியாத்தாடி
அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?
அடியம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா?
ஆ:
உயிரோடு
பெ:
உறவாடும்
ஆ:
ஒரு கோடி ஆனந்தம்
பெ:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆ:
ஆ....அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?அடியம்மாடி.....

பெ:
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
உன்னப்பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டி பாடாதோ?
ஆ:
இப்படி நான் ஆனதில்லை, புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை, மூக்கு நுனி வேர்த்ததில்லை
பெ:
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ?
எச கேட்டாயோ?

லலலலலா...லலலலலா...

ஆ:
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்?
பெ:
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன?
ஆ:
கட்டுத்தறி காளை நானே, கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!
(அடியாத்தாடி)

Thursday, July 05, 2007

131. ஆயிரம் வாசல் இதயம்

தத்துவத்தோடு கதையின் கருவையும் சொல்வது கண்ணதாசனின் சிறப்பு! இந்தப் பாடலும் அப்படி அமைந்த ஒன்றுதான். A.M.ராஜாவின் மெட்டுக்களை சுலபமாக அடையாளம் கண்டுவிட முடியும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அமைந்து, பலரின் மனத்தைக் கொள்ளை கொண்ட திரைப்படம் இது. P.B.ஸ்ரீநிவாஸின் குரல், தமிழ்த்திரையிசை உலகுக்குக் கிடைத்த ஒரு வரம் என்றே சொல்லலாம். இவரின் தாய்மொழி கன்னடம் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------
படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
இசை : A.M.ராஜா
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.B.ஸ்ரீநிவாஸ்
------------------------------------------------------
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
(நினை)
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினை)
ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார், யாரோ இருப்பார், வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினை)
எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை, இதுதான் பயணம், என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
(நினை)

Wednesday, May 09, 2007

130. உலக வாழ்க்கை நடனம்

மொழிமாற்றம் செய்யப்பட்ட படப்பாடல்களில் நன்றாக அமைந்த சில பாடல்களில் இதுவும் ஒன்று. 'சாகர சங்கமம்' என்ற பெயரில் விஸ்வநாத் இயக்கிய தெலுகு திரைப்படத்தின் தமிழாக்கமே சலங்கை ஒலி. இளையராஜா இசை ஆட்சி நடத்தியிருக்கிறார். வைரமுத்துவின் வரிகள் தாளத்தோடு சேர்ந்து தத்துவம் பேசுகின்றன. திரையில் கமலின் நடிப்பும், நடனமும் முதன்மை பெற்றுவிடுகின்றன. எனக்கு மிகப் பிடித்தத் திரைப்படங்களில் ஒன்று இது.எனக்குப்பிடித்த வரிகள்,
'இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா?'

'உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்'

-------------------------------------------
படம் : சலங்கை ஒலி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------------
தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
(தகிட)
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா?
(இருதயம்)
சுதியும் லயமும் ஒன்று சேர
(தகிட)
உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்
(உலக)
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
(மனிதன்)
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
(தகிட)
பழைய ராகம் மறந்து,
நீ பறந்ததென்ன பிரிந்து?
இரவுதோறும் அழுது,
என் இரண்டு கண்ணும் பழுது
(பழைய)
இது ஒரு ரகசிய நாடகமே!
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே!
பாவம் உண்டு! பாவம் இல்லை!
வாழ்க்கையோடு கோபமில்லை!
காதல் என்னைக் காதலிக்கவில்லை...!
ஆ....ஆ....ஆ...!
(தகிட)

Wednesday, April 25, 2007

129. என் வானிலே, ஒரே வெண்ணிலா

இடைக்காலங்களில் மிக அருமையான பாடல்களைப் பாடியவர் இந்த ஜென்ஸீ. என்ன காரணத்தாலோ இவரது இசைப் பயணம் தொடராமல் போனது. அழகான மெட்டில் உருவான பாடல் இது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும்படியான பாடல். இசையின் ராஜாவின் மகுடத்தில் இன்னுமொரு சிறகு.
------------------------------------------
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : ஜென்ஸீ
------------------------------------------
என் வானிலே, ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள், கவிதை தாரகை ஊர்வலம்
(என்)
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
(நீரோடை)
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா?...ஆ....!
(என்)
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
(நீ தீட்டும்)
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா?...ஆ....!
(என்)