Wednesday, April 25, 2007

129. என் வானிலே, ஒரே வெண்ணிலா

இடைக்காலங்களில் மிக அருமையான பாடல்களைப் பாடியவர் இந்த ஜென்ஸீ. என்ன காரணத்தாலோ இவரது இசைப் பயணம் தொடராமல் போனது. அழகான மெட்டில் உருவான பாடல் இது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும்படியான பாடல். இசையின் ராஜாவின் மகுடத்தில் இன்னுமொரு சிறகு.
------------------------------------------
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : ஜென்ஸீ
------------------------------------------
என் வானிலே, ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள், கவிதை தாரகை ஊர்வலம்
(என்)
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
(நீரோடை)
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா?...ஆ....!
(என்)
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
(நீ தீட்டும்)
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா?...ஆ....!
(என்)

Tuesday, April 24, 2007

128. காவேரியாய்ப் பொங்குகிற மனது பாடுகிறது

பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான பாடல். கிராமிய மணம் கமழ, ஒரு வெள்ளந்திப் பெண்ணின் காதலைச் சொல்கிறார் கங்கை அமரன். ஜானகியின் குரல் எல்லா வகையான பாடல்களுக்கும் பொருந்தியிருப்பது ஒரு சிறப்பம்சம்.
----------------------------------------
படம் : கிழக்கே போகும் ரயிலு
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
குரல் : S.ஜானகி
----------------------------------------
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ)

127. இந்த பந்தம், ராக பந்தம்!

என்ன அற்புதமான காதல் வரிகள். தொடர்ந்து பெய்யும் வைரமுத்துவின் கவிதை மழையில் ஒரு துளி! இசை நம்மை எங்கோ இட்டுச் செல்கிறது. ஜானகியின் குரலில் விரகம் ஒலிக்கிறது. எனக்குப் பிடித்த வரிகள்,
"விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகிப் போகுமே!"
"இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்"

"வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!"
---------------------------------------
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.ஜானகி
---------------------------------------
தாநம் தம்த தாநம் தம்த தாநம் தம்த தாநம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வேறென்ன சேதி? தேவனே நானுந்தன் பாதி!
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே! வா வா என் தேவனே!
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே!
பூவும் ஆளானதே!
(நாதம்)
அமுத கானம் நீ தரும் நேரம், நதிகள் ஜதிகள் பாடுமே!
விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகிப் போகுமே!
கண்களில் மௌனமோ? கோயில் தீபமே!
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே!
மார்மீது பூவாகி விழவா? விழியாகி விடவா?
(நாதம்)
இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!
(நாதம்)

126. சப்தமில்லாமல் ஒரு காதல் சங்கீதம்

ஆர்ப்பாட்டமான பாடல்களையே பாடிப் புகழ் பெற்ற L.R.ஈஸ்வரிக்கு, ஒரு வித்தியாசமாக அமைந்து புகழைக் கொடுத்த பாடல் இது. இவரது குரலை நான் ரசிக்க ஓர் ஆரம்பமாக அமைந்ததும் இப்பாடல்தான். வரிகள் அற்புதம். ஏதுமறியாத பெண்மையின் நிலையை அப்படியே கண்முன் கொண்டுவருகிறார் கவிஞர். இசை அருமை!
--------------------------------------
படம் : வெள்ளிவிழா
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்(?)
குரல் : L.R.ஈஸ்வரி
--------------------------------------
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன்மடிமீதுதான் கண் மூடுவேன்
(காதோடுதான்)
வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான்
நான்அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா?
குலவிளக்காக நான் வாழ வழி காட்ட வா
(காதோடுதான்)
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில்யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது?
(காதோடுதான்)

125. ஆசையக் காத்துல தூது விட்டு

என்ன ஒரு துள்ளிசைப் பாடல்! வரிகளில் சொல்லிக்கொள்வதைப் போல் எதுவும் இல்லை. 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வந்த பிறகு இந்தப்பாடல் மேலும் பிரபலம் அடைந்துவிட்டது. வித்தியாசமான ஒரு குரலுக்குச் சொந்தக்காரரான S.P.ஷைலஜா நன்றாகவே பாடி இருக்கிறார்.
------------------------------------------
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
குரல் : S.P.ஷைலஜா
------------------------------------------
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
(ஆசைய)

124. அந்திமத்தில் வீசுது பூங்காத்து

வைரமுத்துவுக்கு தேசிய விருதினைப் பெற்றுத்தந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இவர் மொத்தம் ஐந்து முறை தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் அமைந்த அற்புதமான பாடல்களில் ஒன்று. சிவாஜி கணேசனின் இறுதி காலத்தில் வந்த படங்களில், மலேசியா வாசுதேவனின் குரல் அவருக்கு மிகப் பொருத்தமாக இருந்ததாகத் தோன்றுகிறது.
----------------------------------------------
படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
----------------------------------------------
ஆ:
பூங்காத்து திரும்புமா? என் பாட்ட விரும்புமா?
பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?
(பூங்காத்து)
பெ:
ராசாவே வருத்தமா? ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே! அத உலகம் தாங்காதே.
அடுக்குமா? சூரியன் கருக்குமா?
ஆ:
என்ன சொல்லுவேன்? என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
பெ:
இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஆ:
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி,
சொல்லாத சோகத்த சொன்னேனடி
பெ:
சொக ராகம் சோகந்தானே!
சொக ராகம் சோகந்தானே!
ஆ:
யாரது போரது?
பெ:
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?
(பூங்காற்று)
ஆ:
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
பெ:
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
ஆ:
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே!
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே!
பெ:
எசப்பாட்டு படிச்சேன் நானே
எசப்பாட்டு படிச்சேன் நானே
ஆ:
பூங்குயில் யாரது?
பெ:
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
ஆ:
அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே, ஒலகமே மறந்ததே!
பெ:
நான்தானே அந்தக் குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி,
பறந்ததா? ஒலகந்தான் மறந்ததா?

Friday, April 20, 2007

123. பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்

அற்புதமான கவிதை வரிகள். கட்டுக்களைக் களைந்து பறக்கத் துடிக்கும் இளமையின் வேகம்! நல்ல மெட்டில் அமைந்த பாடல். கீரவாணி என்ற இயற்பெயரைக் கொண்ட மரகதமணி தெலுகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர். என்னை உற்சாகப் படுத்தும் சில பாடல்களில் ஒன்று இது! எனக்குப் பிடித்த வரிகள்,
"பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்"
"கவலையை விற்று கவிதை கொஞ்சம் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்"

----------------------------------------
படம் : வானமே எல்லை
இசை : மரகதமணி
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
----------------------------------------
சோகமினியில்லை அட இனி வானமே எல்லை
தூரமினியில்லை அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானமிருந்தால் அட நல்லது
தகு திகு தகு திகு தகத தக ஹே!
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி!
(சோகம்)
உறவுகள் வேண்டாம் உலகமெங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரமிருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா?
வாழ்வோமே இதிலே பத்தியமா
(சோகம்)
உலகினை விற்று நிலவுலோகம் வாங்கலாம்
நிலவினை விற்று வானம் கொஞ்சம் வாங்கலாம்
கவலையை விற்று கவிதை நூல்கள் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை இருபது வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு!
வாழ்வோமே இதுவே உத்தரவு!
(சோகம்)

122. வாழ்க்கையின் நிறம் சிவப்பு!

புலமைப்பித்தனின் வரிகள் சிவப்பு வண்ணம் தீட்டி நிற்கின்றன. கம்யூனிஸத்திற்கு என்ன ஒரு அழகான வெளிப்பாடு? இந்தப் பாடல் மட்டும் இல்லை. மொத்தப் படமுமேதான். இளையராஜா முதல், முகம் தெரியாத கலைஞர்கள் வரை , பாடலில் பணியாற்றிய அனைவருமே தங்கள் பணியைத் திறம்பட செய்திருக்கிறார்கள். எப்போது கேட்டாலும் ரசிப்பதுடன் சிந்திக்கவும் தூண்டும் ஒரு பாடல் இது!
---------------------------------------------
படம் : உன்னால் முடியும் தம்பி
இசை : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------
புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
வீதிக்கொரு கட்சி உண்டு
சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை
இது நாடா இல்லை வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்லை வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
(புஞ்சை)
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு உழைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும், ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு!
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு!
(புஞ்சை)
ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கொண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே!
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே!
சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?
(புஞ்சை)

121. ஒரு போர்க்களமும், இரு பூக்களும்

பலரின் விருப்பப் பாடலாக இருக்கக்கூடிய ஒரு பாடல். பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. வாலியின் வரிகள் காதலின் வேதனை சொல்கின்றன. இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லத் தேவை இல்லை. S.P.B, S. ஜானகி இணையில் வெளிவந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது. எனக்குப் பிடித்த வரிகள்,
"வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்"

-------------------------------------------
படம் : தளபதி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
-------------------------------------------
ஆ:
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ:
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ:
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
(சுந்தரி)
பெ:
வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா?
பாய்விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?
ஆ:
ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ:
தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை?
ஆ:
வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை!
பெ:
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
ஆ:
மறப்பேன் என்றே நினைத்தாயோ?
(என்னையே)
பெ:
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
ஆ:
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
பெ:
கோடி சுகம் வாராதோ நீயெனைத் தீண்டினால்
ஆ:
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
பெ:
உடனே வந்தால் உயிர் வாழும்
ஆ:
வருவேன், அந்நாள் வரக் கூடும்
(சுந்தரி)

120. காலங்களில் அவள் வசந்தம்

காலங்களைக் கடந்து ஒலிக்கும் ஒரு ரம்மியமான பாடல். கண்ணதாசனின் வரிகளா? இல்லை M.S.விஸ்வநாதனின் இசையா? இல்லை P.B.ஸ்ரீநிவாஸின் குரலா? என்று தெரியாமல் இந்தப் பாடலில் ஏதோ ஒன்று என்னை மயக்குகிறது.
--------------------------------------------
படம் : பாவ மன்னிப்பு
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.B.ஸ்ரீநிவாஸ்
--------------------------------------------
காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்)
பறவைகளில் அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு!
பறவைகளில் அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு!
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்!
(காலங்களில்)
பால்போல் சிரிப்பதில் பிள்ளை, பனி போல் அணைப்பதில் கன்னி
பால்போல் சிரிப்பதில் பிள்ளை, பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை..!
(காலங்களில்)

119. நானென்ன கள்ளா? பாலா?

என் விருப்பப் பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படத்தில் அமைந்த அருமையான பாடல். எனக்குப் பிடித்த வரிகள்,
"பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!"

----------------------------------------
படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : ?
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
----------------------------------------
ONE...TWO...THREE...FOUR
தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
(உனக்கென்ன)
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)

Thursday, April 19, 2007

118. தவணை முறையில் நேசிக்கிறேன், இசையை

கேட்கும்போதெல்லாம் என்னை நிலைகுலையச் செய்துவிடும் ஒரு பாடல். வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை வரிகள் இவை. காதுகளின் வழி இதயத்தில் நுழைந்து ஏதோ செய்கிறார் A.R.ரஹ்மான் . பாடல் காட்சியில் மணிரத்னமும், P.C.ஸ்ரீராமும் இணைந்து அசத்தி இருக்கிறார்கள். சுவர்ணலாதாவின் குரல் மனதைப் பிசைகிறது. எனக்குப் பிடித்த வரிகள் எல்லா வரிகளும்.
--------------------------------------
படம் : அலைபாயுதே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : சுவர்ணலதா
--------------------------------------
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
(எவனோ)
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
(எவனோ)
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
(எவனோ)
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா?
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா?
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா?
எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே!
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே...!
(எவனோ)

117. மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே!

அழகான மெட்டில் அமைந்த தாலாட்டுப் பாடல். இந்த ஒரு பாடல் இளையராஜாவின் இசை ஞானத்துக்கு ஒரு சோற்றுப் பதம் எனலாம். வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் எனத்தெரியவில்லை. S.P.Bன் குரலில் ஒரு மெல்லிய தாய்மை இழையோடி இருக்கிறது இப்பாடலில்.
-------------------------------------
படம் : உதய கீதம்
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------
தேனே தென்பாண்டி மீனே!
இசை தேனே! இசைத்தேனே!
மானே இள மானே!
நீதான் செந்தாமரை, ஆரிராரோ!
நெற்றி மூன்றாம் பிறை, தாலேலேலோ!
(தேனே)
மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே!
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே!
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு
நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு
மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
(தேனே)
பால் கொடுத்த நெஞ்சிலே ஈரமின்னும் காயலே!
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே!
பாதை கொஞ்சம் மாறிப்போனால்
பாசம் விட்டுப் போகுமா?
தாழம்பூவை தூர வைத்தால்
வாசம் விட்டுப் போகுமா?
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை
(தேனே)

116. ஏதேதோ நடக்கிறது காதலில்

தன் முதல் படத்திலேயே எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் G.Vபிரகாஷ்குமார். இப்போதிருக்கும் இளைய தலைமுறைப் பாடலாசிரியர்களில் முன்னணியிலிருப்பவர் நா.முத்துக்குமார். ஒரு திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுத வாய்ப்பளிக்கப்படுகிற சில பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். அப்படிக்கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே வருகிறார் முத்துக்குமார். பாடலின் காட்சியமைப்பு அருமை! படமும் கூடத்தான். கேன்ஸ் திரப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவிருக்கிறது. பிரகாஷ்ராஜை அடுத்து, தன் தயாரிப்பில் வெளிவரும் படங்களும் மிகத்தரமானவை என்று நிருபித்திருக்கிறர் இயக்குனர் ஷங்கர். எனக்குப் பிடித்த வரிகள்,
"அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசிப் பேசி விடியுது இரவு"
------------------------------------------
படம் : வெயில்
இசை : G.V.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : ஷங்கர் மஹாதேவன் & ஷ்ரேயா கோஷல்
------------------------------------------
பெ:
உருகுதே மருகுதே ஒரே பர்வையாலே!
உலகமே சுழலுதே உன்னப் பார்த்ததாலே
ஆ:
ஏ! தங்கம் உருகுதே! அங்கம் கரையுதே!
வெட்கம் உடையுதே! முத்தம் தொடருதே!
பெ:
சொக்கித்தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா!
(உருகுதே)
ஆ:
ஏய்...அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசிப் பேசி விடியுது இரவு
பெ:
ஏழு கடல் தாண்டித்தான், ஏழு மலை தாண்டித்தான்
என் கழுத்து மச்சங்கிட்ட ஓடி வரும் மனசு
ஆ:
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பாக்குறேன்
பெ:
காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப் போகிறேன்
ஆ:
சாமி பாத்துக் கும்பிடும்போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே!
(உருகுதே)
ஆ:
ஊர விட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
பெ:
கூரப்பட்டு சேலதான் வாங்கச் சொல்லிக் கேக்குறேன்
கூடுவிட்டுக் கூடுபாயும் காதலால சுத்துறேன்
ஆ:
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
பெ:
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா?
ஆ:
ஓ....! மையிட்ட கண்ணே உன்ன மறந்தா
இறந்தே போவேன்!
(உருகுதே)

115. பத்தும் பறந்து போகும் காதல் வந்தால்!

காதலும் தமிழும் பொங்கி வழிகின்றன இந்தப் பாடலில். வைரமுத்து வைரமுத்துதான்! ரஹ்மானின் இசை காதலின் வெறியைக் கண்முன் நிறுத்துகிறது. பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை! தன் கடல் காதலை இந்தப் பாடலிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாலச்சந்தர். ஜேசுதாசும் நன்றாகவே பாடி இருக்கிறார்.
--------------------------------------
படம் : டூயட்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
--------------------------------------
வெண்ணிலாவின் தேரிலேறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!
மானமுள்ள ஊமை போல
தானம் கேட்கக் கூசி நின்றேனே!
நிறம் கண்டு முகம் காண்டா நேசம் கொண்டேன்? அவள்
நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
(வெண்ணிலா)
அட கை நீட்டும் தம்பியே - எனைக்
கட்டி வைத்தாள் அன்னையே - நீ
வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே!
(அட)
(நிறம்)
காலழகு, மேலழகு கண்கொண்டு கண்டேன் - அவள்
நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து, மாயம் செய்தாளே!
(அட)
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் - இல்லை
செந்தாமரை பாதத்தில் செருப்பாகப் பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது
(அட)

114. அவளும் ஒரு நிலா

நல்ல சந்தம் அமைந்த ஒரு பாடல். கடினமான மெட்டுக்குள் வார்த்தைகளை அழகாக அடுக்கி இருக்கிறார் கண்ணதாசன். S.P.Bன் ஆரம்ப காலப் பாடல்களில் நன்கு பிரபலமான ஒரு பாடல் இது.
---------------------------------------------
படம் : பட்டிணப்பிரவேசம்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------
வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா
(வான்)
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான்)
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா? ஊடலா? கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான்)
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
(வான்)

Wednesday, April 18, 2007

113. ஏலே...ஏலேலே...! ஏலே...ஏலேலே...!

சமீப நாட்களில் தொலைக்காட்சியிலும், பலரின் மனத்திலும் பெருவாரியாக இடம் பிடித்திருக்கும் ஒரு பாடல் இது. யுவனின் இசை, தனித்தன்மையோடு ஒலிக்கிறது. சினேகனின் வரிகளில் தமிழும், கிராமிய மணமும் தவழ்கின்றன (வைரமுத்துவின் பாசறையில் பயின்றவர் அல்லவா?). கிருஷ்ணராஜ் என்ற அருமையான பாடகர் எப்போதாவதுதான் இப்படி நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறார் என்பது வருத்தமான விஷயம்தான். சமீபத்தில் தமிழ் ரசிகர்களை மயக்கும் ஒரு குரலுக்குச் சொந்தக்காரர் ஷ்ரேயா கோஷல். பிறப்பால் ஒரு பெங்காலியாகவும், ராஜஸ்தானில் வளர்ந்தும் இருக்கும் இவர் தமிழின் 'ழ'கரத்தை தெளிவாக உச்சரிப்பது ஆச்சர்யமே!('முன்பே வா என் அன்பே வா!' என்று நம்மைக் கட்டிப்போட்டவர் இவர்தான்.)
--------------------------------------------
படம் : பருத்திவீரன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
குரல் : மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா
--------------------------------------------
மா:
ஏலே...ஏலேலே...! ஏலே...ஏலேலே...!
ஒத்த பன மரத்துல செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன், சங்கதிய சொல்லித் தரேன்
வாடி..நீ வாடி!
பத்துக்கல்லு பாலத்துல மேச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ள, கூச்சம் கீச்சம் தேவை இல்லை
வாடி..நீ வாடி!
ஏலே...ஏலேலே...!
செவ்வாழ நீ சின்னக்கனி! உன்ன
செறையெடுக்கப் போறேன் வாடி!
ஸ்:
ஐயயோ!
என் உசுருக்குள்ள தீய வச்சான் ஐயயோ!
என் மனசுக்குள்ள நோயத் தச்சான் ஐயயோ!
கி:
சண்டாளி உன் பாசத்தால, நானும்
சுண்டெலியா ஆனேம்புள்ள
ஸ்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
ஐயயோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே ஐயயோ!
என் சமஞ்ச தேகம் சாயுறதே ஐயயோ!
கி:
அரளி வெத வாசக்காரி
ஆளக் கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்சக் கீறி
நீ உள்ள வந்த கெட்டிக்காரி
ஐயயோ...
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே ஐயயோ!
என் மீச முறுக்கு மடங்கிப் போச்சே ஐயயோ!
ஸ்:
கல்லுக்குள்ள தேர போல
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா?
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா?
யு:
ஓஹோ....!
ஸ்:
ஐயனாரப் பாத்தாலே உன் நினப்பு தான்டா!
அம்மிக்கல்லு பூப்போல ஆகிப்போச்சு ஏன்டா?
நான் வாடாமல்லி...நீ போடா அல்லி!
கி:
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே! நீ
தொட்டா அருவா கரும்பாகுதே!
(தொரட்டி)
(சண்டாளி)

112. மயங்குகிறாள் ஒரு மாது, காத(ல/லி)ன் பிரிவில்

மிக அருமையான மெட்டு. கேட்கும்போது மனதை உருக்கிவிடும்படியாக அமைத்திருக்கிறார் இளையராஜா. படலுக்கேற்ற குரல் தேர்வு. இதே மெட்டை, இந்த வருடம் வெளியான 'அநுமனாஸ்பதம்' என்ற தெலுகு படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா. பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கிறார். பாடல் வரிகள்
'ப்ரதி க்ஷணம் நீ தர்ஷனம் மரி தொரக்குனா தொரக்குனா?'
-----------------------------------------------
படம் : நானே ராஜா நானே மந்திரி
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : ஜெயச்சந்திரன் & P. சுசீலா
-----------------------------------------------
பெ:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
(மயங்கினேன்)
ஆ:
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
பெ:
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
ஆ:
இரு கண்ணும் என் நெஞ்சும்
பெ:
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
(மயங்கினேன்)
ஆ:
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
பெ:
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
ஆ:
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
பெ:
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
ஆ:
அந்த நாளை எண்ணி நானும்
பெ:
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்
(மயங்கினேன்)

Monday, April 02, 2007

111. நுரையால் செய்த சிலையாம்... அவள்!

எனக்குப் பிடித்த தமிழ்ப்பாடல்களைப் பட்டியலிட்டால், அதில் முதல் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பெறும் பாடல் இது. வைரமுத்துவை நான் மிகவும் விரும்புவதற்குக் காரணமான பாடல்களில் முக்கியமான ஒன்று இப்பாடல். 'நுரையால் செய்த சிலையா நீ?' இப்படி ஒரு பெண்ணை வேறு யாராலும் வர்ணிக்க முடியுமா என்று தெரியவில்லை. 'நிலவிலும், நீரிலும் பொருள் எடை இழக்கும்' என்று அறிவியலும் சொல்கிறார் கவிஞர். ஸ்ரீநிவாஸின் குரலில் ஒரு வசீகரம் எப்போதுமே இருக்கிறது. தனிமையான பொழுதுகளை இனிமையாக்கவே, A.R.ரஹ்மான் இந்த மெட்டைப் போட்டிருப்பார் போல. பாடலின் காட்சியமைப்பில் எதுவும் குறிப்பிடும்படி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனக்குப் பிடித்த வரிகள், எல்ல வரிகளும்.
-----------------------------------------
படம் : ரட்சகன்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஸ்ரீநிவாஸ்
-----------------------------------------
கனவா? நீ காற்றா?
கனவா? இல்லை காற்றா?
கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த சிலையா நீ?
இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா?
(கையில்)
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
ஓ.....!
(நிலவில்)
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே!
(காதல்)
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே!
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே!
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே!
(கையில்)