Monday, January 02, 2006

3.சங்கீதமே சந்நிதி!

படம் : சிகரம்
இசை : S.P.பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
அகரம் இப்போ சிகரம் ஆச்சு!
தகரம் இப்போ தங்கம் ஆச்சு!
காட்டு மூங்கில், பாட்டுப் பாடும்,
புல்லாங்குழல் ஆச்சு!
சங்கீதமே சந்நிதி....
சந்தோஷம் சொல்லும் சங்கதி!
(சங்கீதமே)
(அகரம்)
கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும், கரை ரெண்டும் வாழும்.
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய்யன்பு போகும், மெய்யன்பு வாழும்.
அன்புக்கு உருவமில்லை!
பாசத்தில் பருவமில்லை!
வானோடு முடிவுமில்லை!
வாழ்வோடு விடையுமில்லை!
இன்றென்பது உண்மையே.....
நம்பிக்கை உங்கள் கையிலே!

(அகரம்)
தண்ணீரில் மீன்கள் வாழும்.
கண்ணீரில் காதல் வாழும்.
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே!
பசியாற பார்வைபோதும்!
பரிமாற வார்த்தை போதும்!
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்!
தலைசாய்க்க இடமாயில்லை!
தலை கோத விரலாயில்லை!
இளங்காற்று வரவாயில்லை!
இளைப்பாறு பரவாயில்லை!
நம்பிக்கையே நல்லது.....
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!

(அகரம்)

3 Comments:

Blogger Sud Gopal சொல்கிறார்.....

தலைசாய்க்க இடமாயில்லை!
தலை கோத விரலாயில்லை!
இளங்காற்று வரவாயில்லை!
இளைப்பாறு பரவாயில்லை!
நம்பிக்கையே நல்லது.....
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது


எனக்கு ரொம்பவும் பிடித்தமான வரிகள்.

உங்கள் கவிதைகள் நல்லாவே இருக்கு.குறிப்பா உங்களுக்கு அறிவியல் பிடிக்காததுக்கு நீங்க சொன்ன காரணம்.

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!!!

January 05, 2006 4:06 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

நன்றி!
தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை வேண்டி....

சேரல்

January 09, 2006 3:36 AM  
Blogger Veeru சொல்கிறார்.....

Hi SAral,

This song was written By Vairamuthu.. If possible, update it.

Veeru :)

July 03, 2007 7:54 AM  

Post a Comment

<< Home