Tuesday, January 03, 2006

9.தாயின் பாதம் பணிந்து....

படம் : மன்னன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
-------------------------------------------------------------
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
(அம்மா)
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா!
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா!
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே!
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே!
அதை நீயே தருவாயே....!
(அம்மா)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா!
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா!
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?
உன்னாலே பிறந்தேனே...!
(அம்மா)

1 Comments:

Blogger சீனு சொல்கிறார்.....

இப்பாடலின் வரிகளை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவிலில் கல்வெட்டாக செதுக்கியிருக்கிறார்கள்.

March 27, 2006 12:41 AM  

Post a Comment

<< Home