Sunday, March 26, 2006

57.வானம் பார்த்த பூமியாக வாழும் காதலன்...!

A.M.ராஜா மிகச் சிறந்த பாடகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் இது போன்ற அமரத்துவம் வாய்ந்த பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். இவர் முதலில் இசை அமைத்த படம் " கல்யாணப் பரிசு". இவரின் மனைவி ஜிக்கியும் பிரபலமான ஒரு பாடகியாகத் திகழ்ந்தவர். ஸ்ரீதர் இந்தப் படத்தின் இயக்குனர். காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலின் காட்சியமைப்பும் அருமை (முழுப்படமுமே காஷ்மீரில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது). இந்தப் பாடல் என் விருப்பப் பாடல்களில் மிக முக்கியமான ஒன்று.
------------------------------------------------------------
படம் : தேன்நிலவு
இசை : A.M.ராஜா
வரிகள் : கண்ணதாசன்
குரல் : A.M.ராஜா
------------------------------------------------------------
பாட்டு பாடவா? பார்த்து பேசவா?
பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா?
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா?
(பாட்டு)
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே,
மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே!
(மேக வண்ணம்)
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா?
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா?
(பக்கமாக)
மாலை அல்லவா? நல்ல நேரமல்லவா?
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா?
(பாட்டு)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,
நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே!
(அங்கமெல்லாம்)
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா?
இந்த காதலிக்கு தேன்நிலவில் ஆசை இல்லையா?
(கண்ணிறைந்த)
காதல் தோன்றுமா? இன்னும் காலம் போகுமா?
இல்லை காத்துக் காத்து நின்றது தான் மீதமாகுமா?
(பாட்டு)

0 Comments:

Post a Comment

<< Home