Sunday, March 05, 2006

49. சிறகு முளைத்தத் தீயானேன்!

அறிவுமதியின் அற்புதமான வரிகள் இந்தப் பாடலுக்கு அழகூட்டுகின்றன. வித்யாசாகரின் இசையும், மதுபாலகிருஷ்ணாவின் குரலும் பாடலை மேலும் சிறப்புறச் செய்கின்றன. எல்லாம் இருந்தும், இந்தப் பாடல் இடம்பெற்றத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, எல்லாத் திறமையும் வீணாகிவிட்டதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. ஆனாலும், பிரபலமாகாத, எனக்குப் பிடித்த, இந்தப் பாடலைப் பதிப்பிப்பதில் எனக்குச் சந்தோஷமே! இனி திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில்லை என்று அறிவித்துவிட்ட அறிவுமதியின் கோபம் இயல்பானதே! இருந்தாலும் என் போன்ற ரசிகர்களுக்கு அது மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
-------------------------------------------------
படம் : சுள்ளான்
இசை : வித்யாசாகர்
வரிகள் : அறிவுமதி
குரல் : மதுபாலகிருஷ்ணா
-------------------------------------------------
சிறகு முளைத்தத் தீயானேன்!
நான் திசைகள் உடைத்தக் காற்றானேன்!
ஊழி நெருப்பில் கருவானேன்!
நான் உன்னை அழிக்க உருவானேன்!
கொடுமைகள் கண்டு பொறுப்பேனா?
நான் குத்துக் கல்லாய் இருப்பேனா?
அக்னி குஞ்சை அடைக் காத்தேன்!
அட இக்கணம் உன்னை குடை சாய்ப்பேன்!
கூற்றக் கழுவினில் ஏற்றும் துணிவினில்
சீற்றப் புயலென வருவேன்டா!
மூர்க்கப் பயலுனை தீர்க்கும் வரையினில்,
தூக்கம் என்பதை மறப்பேன்டா!
அடங்கா வெறியுடன் அடி நாள் பசியுடன்,
கயவா உனதுயிர் பிழிவேன்டா!
இரண்டாய் உனதுடல் பிளந்தே
நெருப்பினில் மிளகாய் கருகிட எறிவேன்டா!
குருதி அருவி என பெருகி பெருகி வர,
இறுதி இறுதி என மரணம் திமிறி வர,
திருகி திருகி தலை சிதறி தரையில் விழ,
தருவி தருவி மனம் குமுறி குமுறி எழ,
ஆணவங்கள் சாய்ந்திருக்க
ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க
சூரனுக்கு வேல் எடுத்த
வேலனுக்கு சேவல் என்று சிரிப்பேன்டா!

0 Comments:

Post a Comment

<< Home