Monday, March 27, 2006

60. ஓர் ஓவியனும், ஓர் ஒவியமும்

கவிதை இல்லாமல் காதலோ, காதல் இல்லாமல் கவிதையோ இல்லை என்று அடிக்கடி நினைக்க வைத்துவிடுவார் வைரமுத்து. இந்தப் பாடலைக் கேட்கும்போதும் அதே எண்ணம் வருவதுண்டு! வித்யாசாகரின் மென்மையான இசை லேசாக இதயத்தை வருடிச் செல்கிறது. இந்த விஜய்பிரகாஷ் யார் என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இருவருக்குமே இனிமையான குரல் வளம்!
என்னைக் கவர்ந்த வரிகள்.... எல்லா வரிகளுமே! குறிப்பாக,
"மேகத்தை ஏமாற்றி,
மண் சேரும் மழை போலே,
மடியோடு விழுந்தாயே வா!"
----------------------------------------------------------------
படம் : அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : விஜய்பிரகாஷ் & சாதனா சர்கம்
----------------------------------------------------------------
ஆ:
பூ வாசம் புறப்படும் பெண்ணே! நான் பூ வரைந்தால்...
தீ வந்து விரல் சுடும் கண்ணே! நான் தீ வரைந்தால்....
பெ:
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்,
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
ஆ:
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....!
(பூ வாசம்)
ஆ:
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்!
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்!
பெ:
கோடு கூட ஓவியத்தின் பாகமே!
ஊடல் கூட காதல் என்று ஆகுமே!
ஆ:
ஒரு வானம் வரைய நீல வண்ணம்!
நம் காதல் வரைய என்ன வண்ணம்?
பெ:
என் வெட்கத்தின் நிறம் தொட்டு,
விரல் என்னும் கோல் கொண்டு,
நம் காதல் வரைவோமே வா!
(பூ வாசம்)
பெ:
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
ஆ:
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது!
பெ:
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆ:
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது!
பெ:
நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்!
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்!
ஆ:
மேகத்தை ஏமாற்றி,
மண் சேரும் மழை போலே,
மடியோடு விழுந்தாயே வா!
(பூ வாசம்)

1 Comments:

Blogger No Name சொல்கிறார்.....

நிறைய பாடல்களின் வரிகளை நான் இங்கு கண்டேன்... நன்றி நண்பரே...

July 29, 2008 6:27 PM  

Post a Comment

<< Home