Tuesday, January 10, 2006

17.நாளைய நாட்டின் தலைவனும் நீயே!

படம் : உன்னால் முடியும் தம்பி
இசை : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------
உன்னால் முடியும் தம்பி! தம்பி!
அட! உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!
தோளை உயர்த்து! தூங்கி விழும் நாட்டை எழுப்பு!
உன் தோளை உயர்த்து! தூங்கி விழும் நாட்டை எழுப்பு!
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்!
(உன்னால்)
நாளைய நாட்டின் தலைவனும் நீயே!
நம்பிக்கை கொண்டு வருவாயே!
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு!
(உன்னால்)
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்,
சாராய கங்கை காயாதடா!
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்,
காசுள்ள பக்கம் பாயாதடா!
குடிச்சவன் போதையில் நிப்பான்!
குடும்பத்தை வீதியில் வைப்பான்!
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா!
கள்ளுக்கடை காசிலே தாண்டா,
கட்சிக் கொடி ஏறுதுபோடா!
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்!
(உன்னால்)
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை,
கையோடு இன்றே தீ மூட்டுவோம்!
கல்லாத பேர்கள் இல்லாத நாடு,
நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்!
இருக்கிற கோவிலை எல்லாம்,
படிக்கிற பள்ளிகள் செய்வோம்!
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்!
வானம் உங்கள் கைகளில் உண்டு!
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு!
நான் என்று எண்ணாமல் நாம் என்ற உணர்வு கொள்ளணும்
(உன்னால்)

0 Comments:

Post a Comment

<< Home