Friday, January 27, 2006

22.கடவுள், மிருகம்...மத்தியில் நான்!

படம் : ஆளவந்தான்
இசை : ஷங்கர், எஷான்& லாய்
வரிகள் : வைரமுத்து
குரல் : கமல்ஹாசன்
------------------------------------------------------------
கடவுள் பாதி! மிருகம் பாதி!
கலந்து செய்த கலவை நான்!
வெளியே மிருகம்! உள்ளே கடவுள்!
விளங்க முடியா கவிதை நான்!
மிருகம் கொன்று, மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்!
ஆனால்,
கடவுள் கொன்று உணவாய்த் தின்று,
மிருகம் மட்டும் வளர்கிறதே!
நந்தகுமாரா! நந்தகுமாரா!
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?
குரங்கிலிருந்து மனிதன் என்றால்,
மனிதன் இறையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா!
தேவ ஜோதியில் கலப்பாயா?
(கடவுள்)
கடவுள் பாதி! மிருகம் பாதி!
கலந்து செய்த கலவை நான்!

காற்றில் ஏறி, மழையில் ஆடி,
கவிதை பாடும் பறவை நான்!
ஒவ்வொரு துளியும், ஒவ்வொரு துளியும்,
உயிரின் வேர்வை குளிர்கிறதே!
எல்லா துளியும் குளிரும்போது,
இரு துளி மட்டும் சுடுகிறதே!
நந்தகுமாரா! நந்தகுமாரா!
மழை நீர் சுடாது தெரியாதா?
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்,
வெந்நீர் துளியென அறிவாயா?
சுட்ட மழையும், சுடாத மழையும்,
ஒன்றாய்க் கண்டவன் நீதானே!
தண்ணீர் மழையைக் கண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன் நீதானே...!
(கடவுள்)

2 Comments:

Blogger supersubra சொல்கிறார்.....

வைரமுத்துவின் அருமையான கவிதை வரிகள். ஆனால் கடவுள் கொன்று உணவாய்த் தின்று, என்பதற்கு பதில் இறையைக் கொன்று இறையாய் தின்று என்றிருந்திருக்கலாம்.

January 28, 2006 3:40 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

அருமை!
சிறந்த கவிகளும் கூட,
சில விஷயங்களைத் தவற விட்டு விடுகிறார்கள்!
******
அக்கறையோடு ஒரு சிறு திருத்தம்...
இ'றை'யைக் கொன்று இ'ரை'யாய்த் தின்று என்று இருக்க வேண்டும்.

January 29, 2006 9:00 PM  

Post a Comment

<< Home