Friday, January 27, 2006

24.அழகுதான்! நதியும்..பெண்ணும்!

படம் : ரிதம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னிமேனன் & குழு
--------------------------------------------------------------------
ஆ:
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா!
தீம்தனனா தீம்தனனா திரனா!
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா!
தீம்தனனா தீம்தனனா திரனா!
நதியே நதியே காதல் நதியே! நீயும் பெண்தானே!

அடி நீயும் பெண்தானே!
ஒன்றா இரண்டா காரணம் நூறு! கேட்டால் சொல்வேனே!
நீ கேட்டால் சொல்வேனே!
(தீம்தனனா)
ஆ:
நடந்தால் ஆறு! எழுந்தால் அருவி! நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி! மணந்தால் மனைவி! பெற்றால் தாயல்லோ!
சிறு நதிகளே! நதியிடும் கரைகளே!
கரைதொடும் நுரைகளே! நுரைகளில் இவள் முகமே!
(சிறு)
(தீம்தனனா)
கு:
தினம் மோதும், கரை தோறும்! அட ஆறும் இசை பாடும்!
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே!
கங்கை வரும், யமுனை வரும், வைகை வரும், பொருணை வரும்,
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே!
(தினம்)
ஆ:
காதலி அருமை பிரிவில்! மனைவியின் அருமை மறைவில்!
நீரின் அருமை அறிவாய் கோடையிலே!
வெட்கம் வந்தால் உறையும்! விரல்கள் தொட்டால் உருகும்!
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே!
தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ!
தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் ஓஹோ!
(தண்ணீர்)
(தீம்தனனா)
ஆ:
வண்ண வண்ணப் பெண்ணே! வட்டமிடும் நதியே!
வளைவுகள் அழகு! உங்கள் வளைவுகள் அழகு!
மெல்லிசைகள் படித்தல்! மேடு பள்ளம் மறைத்தல்!
நதிகளின் குணமே! அது நங்கையின் குணமே!
(சிறு)
(தினம்)
(தீம்தனனா)
ஆ:
தீங்கனியில் சாறாகி, பூக்களிலே தேனாகி,
பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி,
சேயருகே தாயாகும் பெண்ணே!
பூங்குயிலே! பூங்குயிலே!
பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்!
நீர் நினைத்தால், பெண் நினைத்தால்,
கரை(றை)கள் யாவும் கரைந்து போகக் கூடும்!
(நதியே)

2 Comments:

Blogger சிங். செயகுமார். சொல்கிறார்.....

நண்பரே தேரோடும் திருவாரூரா நீர்! இதே படத்தில ஐம்பூதங்களை உள்ளடக்கிய பாடலை கேட்டீரா?

January 27, 2006 8:48 AM  
Blogger Sud Gopal சொல்கிறார்.....

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒரு பஞ்ச பூதத்தை மையமாக வைத்திருக்கும்.

நதியே - நீர்
தனியே தன்னந்தனியே - நிலம்.
பத்திக்கிச்சு - நெருப்பு
காற்றே என் வாசல் - காற்று
கலகலவென - ஆகாயம்

இந்தப் பாடலை எழுதிய வைரமுத்து தான் சித்தி தொலைக்காட்சித் தொடரின் டைட்டில் பாடலான "கண்ணின் மணி"யினையும் எழுதியிருக்கிறார்.
இந்த இரு பாடல்களுக்கும் உள்ள ஒரு பொதுவான ஒற்றுமை பெண்ணை,நீருக்கு ஒப்பிட்டு இருப்பது தான்.உன்னிமேனனின் மென்மையான குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் கோடை கால அருவி என்றால் நித்யஸ்ரீயின் கணீர்க்குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் காட்டற்று வெள்ளம்.

January 30, 2006 1:15 AM  

Post a Comment

<< Home