Thursday, February 02, 2006

35.மெய் என்று மேனியை யார் சொன்னது?

படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------------
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!

2 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

நேயர் விருப்பம்:

"கடவுளைப் பார்த்ததில்லை
தாய்மடி அறிந்ததில்லை
தயா! தயா! நீ அறிவாயா?

ஆறடி குட்டி உடம்புக்குள்ளே
ஆயிரம் பாவங்கள் சேர்த்தாயே
ஆடி அடங்கும் வேலையிலும்"

என்று நான் அறைகுறையாய்த் தெரிந்து வைத்திருக்கும் இந்தப் பாடலை, சேரன் நிறைவு செய்வான் என நம்புகிறேன்.

-ஞானசேகர்

February 03, 2006 7:01 AM  
Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

நேயர் விருப்பம்:

"எங்கேயோ திக்கு திசை
காணாத தூரம்தான்
தள்ளாடி வந்ததென்ன
தென்னாட்டின் ஓடம்தான்?

நான் கங்கா நதியைக்
காணும்பொழுது
உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும்
மனிதன் அழுக்கில்
கங்கை களங்குது"

நிறைவுசெய் சேரன். தவமாய்த் தவமிருக்கிறேன்.

-ஞானசேகர்

February 06, 2006 8:42 PM  

Post a Comment

<< Home