Sunday, February 19, 2006

41.நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை!

S.P.பாலசுப்ரமணியத்திற்கு, சிறந்த பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுத் தந்த பாடல் இது. இவர் மட்டுமல்லாது, A.R.ரஹ்மான், சித்ரா, வைரமுத்து, பிரபு தேவா ஆகியோரும் இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்றனர். A.V.M.தயாரிப்பு நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், A.R.ரஹ்மான், வைரமுத்து கூட்டணிக்கு ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
------------------------------------------------------------------------
படம் : மின்சாரகனவு
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------------------
தங்கத் தாமரை மகளே! வா அருகே!
தத்தித் தாவுது மனமே! வா அழகே!
வெள்ளம் மன்மத வெள்ளம்.
சிறு விரிசல் கண்டது உள்ளம்.
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே!
(தங்கத் தாமரை)
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே!
என்கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே!
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே!
உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே!
இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க,
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க?
தொடட்டுமா தொல்லை நீக்க?
(தங்கத் தாமரை)
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்!
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்!
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்!
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்!
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை!
நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை!
நெருக்கமே காதல் பாஷை!
(தங்கத் தாமரை)

0 Comments:

Post a Comment

<< Home