Monday, February 20, 2006

42.மகாநதி.... கண்ணீரோடு....

கமல் ஹாசனின் வித்தியாசமான குரலோடு ஒலிக்கும் இந்தப் பாடல், திரைப்படத்தின் முதலில் வரும் "தைப்பொங்கலும் வந்தது" என்ற சந்தோஷமான பாடலின் மெட்டிலேயே அமைந்து, அதே நேரம் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது! இந்தப் பாடலை பதிப்பிக்குமாறு கேட்டு, பின் வரிகளையும் எழுதியனுப்பிய நண்பன் சேகருக்கு நன்றி...!
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரென்று தெரிந்தால் யாரேனும் சொல்லுங்கள்.
----------------------------------------------------------------
படம் : மகாநதி
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : கமல்ஹாசன்
----------------------------------------------------------------
எங்கேயோ திக்குதெச காணாத தூரந்தான்.
எம்மாடி வந்ததென்ன தென்னாட்டின் ஓடம்தான்.
காவேரி தீரம்விட்டு கால்கள் வந்ததடி!
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி!
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனதே!
கண்ணார நானும் காண இத்தனைநாள் ஆனதே!

இது கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி!

பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி!
நான் கங்கா நதியைக் காணும் பொழுது உண்மை விளங்குது!
இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது!
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது!
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது?

5 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

//நான் கங்கா நதியைக் காணும் பொழுது உண்மை விளங்குது!
இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது!//

Beautiful lines.

-j s gnanasekar

February 20, 2006 5:46 AM  
Blogger Chandravathanaa சொல்கிறார்.....

என்னைப் போல நீங்களும் பாடல்களை ரசிப்பவரா?
என்னிடம் இல்லாத பல பாடல்கள் உங்களிடமிருந்தன. ரசித்தேன் நன்றி. தொடர்ந்தும் எழுதுங்கள்.

இந்த வரிகள் எனக்கும் பிடித்தவை

http://cinemapadalkal.blogspot.com/

February 20, 2006 6:31 AM  
Blogger தமிழ் தாசன் சொல்கிறார்.....

அதே மெட்டில், படத்தில் மற்றுமொரு பாடல் உள்ளது..

என் நெஞ்சை நெகிழவைத்த வரிகள் இதொ...

அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் என்னாளும்

அய்யா உன் கால்கள் பட்ட பூமி தாயின் மடி
எங்கேயும் ஏதுமில்ல ஈடு சொல்லும்படி

காவேரி அலைகள் வந்து கரையில் உன்னை தேடிடும்
காணாமல் வருத்தப்பட்டு தலைகுவிந்து ஓடிடும்

ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்
இதை விட்டாலும் நெஞ்சை வாழவைப்பது வேறு எந்த இடம்

தன் மன்னை விட்டொரு குருவி குடும்பம் பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி

இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு ஒலமிட்டதடி
இதில் நன்மை கூறட்டும் தீமை ஓடட்டும் காலம் காலம் விட்டபடி.

February 20, 2006 6:55 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

nandri...!

February 20, 2006 10:08 PM  
Blogger சீனு சொல்கிறார்.....

//என்னைப் போல நீங்களும் பாடல்களை ரசிப்பவரா?
//

நானுந்தான்.

சீனு.

March 27, 2006 12:24 AM  

Post a Comment

<< Home