Wednesday, April 05, 2006

67. மின்னல் தூரிகையில் எழுதிய ஓவியம் அவள்!

அதீதமான காதல் வயப்பட்ட கவிஞனின் வார்த்தைகள் இவை...! இசையும், வரிகளும் அற்புதம்!
------------------------------------------------
படம் : ஜீன்ஸ்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & குழு
------------------------------------------------
ஆ:
அன்பே அன்பே கொல்லாதே!
கண்ணே கண்ணைக் கிள்ளாதே!
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே!
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே!
(அன்பே)
ஆ:
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்,
அடடா பிரம்மன் கஞ்சனடி!
சற்றே நிமிர்ந்தேன், தலை சுற்றிப் போனேன்,
ஆஹா அவனே வள்ளலடி!
மின்னலைப் பிடித்து, தூரிகை சமைத்து,
ரவிவர்மன் எழுதிய வதனமடி!
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி!
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்,
நீதான் நீதான் அழகியடி!
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து,
என்னை வதைப்பது கொடுமையடி!
(அன்பே)
கு:
கொடுத்து வைத்த பூவே! பூவே!
அவள் கூந்தல் மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே! நதியே!
அவள் குளித்த சுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே!
காலளவைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே!
மாரழகைச் சொல்வாயா?
ஆ:
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி,
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்!
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு,
உயிருக்கு உயிராய் உறையிடுவேன்!
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து,
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்!
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது,
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்!
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக,
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்!
தேவதை குளித்தத் துளிகளை அள்ளி,
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே)

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

Cheral !!!

Are you from Tiruvarur?
I do come from Tiruvarur. Drop me a mail at demideity@gmail.com. We can get to know more.

April 05, 2006 9:44 AM  

Post a Comment

<< Home