Friday, April 07, 2006

68. தேவையும், சேவையும் கேட்கும் காதலி!

காதல் சொட்டச் சொட்ட எழுதி இருக்கிறார் கவிஞர்! ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு ஆணால் இவ்வளவு காதல் செய்ய முடியுமா? வைரமுத்து வைரமுத்துதான்! முதல் சரணத்தில் தன் தேவையையும், இரண்டாம் சரணத்தில் தன் சேவையையும் காதலி சொல்வதாய் அமைந்த பாடல் இது...! இதில் இடம்பெறும் "நேற்று முன்னிரவில்" வரிகள், கவிஞரின் "பெய்யெனப் பெய்யும் மழை" கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற வரிகள். சாதனா சர்கமுக்கு நிறைய தமிழ் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்த பாடல் இது எனலாம். மணிரத்னமும், P.C.ஸ்ரீராமும் இந்தப்பாடலை வெள்ளித்திரையில் அற்புதமாக இழைத்திருப்பார்கள். A.R.ரஹ்மான் இசை பற்றிச் சொல்லவே தேவையில்லை.
---------------------------------------------------------
படம் : அலைபாயுதே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : சாதனா சர்கம் & ஸ்ரீநிவாஸ்
---------------------------------------------------------
ஆ:
நேற்று முன்னிரவில், உன் நித்திலப்பூ மடியில்,
காற்று நுழைவது போல், உயிர் கலந்து களித்திருந்தேன்!
இன்று பின்னிரவில், அந்த ஈர நினைவில்,

கன்று தவிப்பது போல், மனம் கலங்கிப் புலம்புகிறேன்!
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்....

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்....
கர்வம் அழிந்ததடி...! என் கர்வம் அழிந்ததடி.....!
பெ:
சிநேகிதனே! சிநேகிதனே! ரகசிய சிநேகிதனே!
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே!
இதே அழுத்தம் அழுத்தம், இதே அணைப்பு அணைப்பு,
வாழ்வின் எல்லை வரை வேண்டும்....வேண்டும்!
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே!
(சிநேகிதனே)
பெ:
சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய்!
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்!
மலர்கையில் மலர்வாய்!
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்,
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்!
சத்தமின்றி துயில்வாய்!
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி,
சேவகம் செய்ய வேண்டும்!
நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்,
துடைக்கின்ற விரல் வேண்டும்!

(சிநேகிதனே)
(நேற்று முன்னிரவில்)
பெ:
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்...!
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்!
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்!
காதில் கூந்தல் நுழைப்பேன்!
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்!
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்!
உப்பு மூட்டை சுமப்பேன்!
உன்னை அள்ளி எடுத்து, உள்ளங்கையில் மடித்து,
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்!
வேளைவரும் போது, விடுதலை செய்து,
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்!
(சிநேகிதனே)

3 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

நல்ல பாடல். இப்பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். "நேற்று முன்னிரவில்" முதல் "கர்வம் அழிந்ததடி" வரையிலான வரிகளின் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. என்ன அர்த்தம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். பாடியவரின் உச்சரிப்பு அப்படி! ரகுமானும் வித்யாசாகரும் ஏன் இப்படித் தமிழ்க்கொலை செய்பவர்களைப் பாடவைக்கிறார்களோ தெரியவில்லை. கேட்டால், உதித்நாராயணனைப் போன்ற குரல்வளம் யாருக்கும் இல்லையாம்! கஷ்டமடா சாமி! சப்தஸ்வரங்கள் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை போலிருக்கிறது. உதித்நாராயணன் பாடிய பாடல்களை மாணிக்கவிநாயகம் பாடினால் இன்னும் நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி
கமல்

April 07, 2006 6:23 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

உண்மையில் ஸ்ரீநிவாஸ் நல்ல உச்சரிப்புடன் பாடக்கூடியவர்தான். இந்தப் பாடல்தான் கொஞ்சம் விதிவிலக்காக அமைந்துவிட்டது

April 07, 2006 6:30 AM  
Anonymous Anonymous சொல்கிறார்.....

ஓவ்வொரு பாடகர்களும், ஒரு விதம். அவர்களுக்கு என்று தனி பானியும் கூட இருக்கிரது.

உதித்நாராயணனையும் மாணிக்கவிநாயகத்தையும் நிச்சயமாகவே எவராலும் சம்மந்தப்படுத்தி பேசமுடியாது.

அ.ரா ரஹ்மான் ஒருவரை தன் பாடலுக்கு தேர்ந்து எடுதிருக்கிறார் என்றாள், அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். அவர் தனது பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் அதிக நேரம் செலவழிப்பது, அந்த பாடல், அதன் கருத்து/ஓசை/ஒலி கேட்பவர்களின் காதுகளை இசை என்ற இன்ப மழையாள் வருட தான்.

May 04, 2006 2:58 AM  

Post a Comment

<< Home