111. நுரையால் செய்த சிலையாம்... அவள்!
எனக்குப் பிடித்த தமிழ்ப்பாடல்களைப் பட்டியலிட்டால், அதில் முதல் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பெறும் பாடல் இது. வைரமுத்துவை நான் மிகவும் விரும்புவதற்குக் காரணமான பாடல்களில் முக்கியமான ஒன்று இப்பாடல். 'நுரையால் செய்த சிலையா நீ?' இப்படி ஒரு பெண்ணை வேறு யாராலும் வர்ணிக்க முடியுமா என்று தெரியவில்லை. 'நிலவிலும், நீரிலும் பொருள் எடை இழக்கும்' என்று அறிவியலும் சொல்கிறார் கவிஞர். ஸ்ரீநிவாஸின் குரலில் ஒரு வசீகரம் எப்போதுமே இருக்கிறது. தனிமையான பொழுதுகளை இனிமையாக்கவே, A.R.ரஹ்மான் இந்த மெட்டைப் போட்டிருப்பார் போல. பாடலின் காட்சியமைப்பில் எதுவும் குறிப்பிடும்படி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனக்குப் பிடித்த வரிகள், எல்ல வரிகளும்.
-----------------------------------------
படம் : ரட்சகன்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஸ்ரீநிவாஸ்
-----------------------------------------
கனவா? நீ காற்றா?
கனவா? இல்லை காற்றா?
கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த சிலையா நீ?
இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா?
(கையில்)
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
ஓ.....!
(நிலவில்)
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே!
(காதல்)
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே!
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே!
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே!
(கையில்)
-----------------------------------------
படம் : ரட்சகன்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஸ்ரீநிவாஸ்
-----------------------------------------
கனவா? நீ காற்றா?
கனவா? இல்லை காற்றா?
கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த சிலையா நீ?
இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா?
(கையில்)
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
ஓ.....!
(நிலவில்)
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே!
(காதல்)
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே!
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே!
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே!
(கையில்)
2 Comments:
// 'நுரையால் செய்த சிலையா நீ?' இப்படி ஒரு பெண்ணை வேறு யாராலும் வர்ணிக்க முடியுமா என்று தெரியவில்லை.//
வருணிப்பது இருக்கட்டும். உண்மையாகவே நுரையால் செய்யப்பட்ட சிலை இருக்கிறது.
திருவலஞ்சுளி வெள்ளைப் பிள்ளையார் கடல்நுரையால் ஆனவர்.
கருத்துக்கு நன்றி குலவுசனப்பிரியன்!
பாடலுக்கு சம்மந்தமில்லை என்றாலும், நல்ல செய்தியை அளித்திருக்கிறீர்கள். அந்த ஊர் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
ப்ரியமுடன்,
சேரல்
Post a Comment
<< Home