Tuesday, March 27, 2007

107. வசந்த கால நதிகளிலே ............ வசந்தகால நீரலைகள்

அற்புதமான ஓர் அந்தாதி! எழுதிய கண்ணதாசன், இசையமைத்த M.S.V, பாடிய ஜெயச்சந்திரன், வாணிஜெயராம், M.S.V, படமாக்கிய பாலச்சந்தர், நடித்த ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்களே!
----------------------------------------------
படம் : மூன்று முடிச்சு
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & M.S.விஸ்வநாதன்
----------------------------------------------
ஜெ:
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

வா:
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

ஜெ:
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

வா:
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

M.S.V:
மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

0 Comments:

Post a Comment

<< Home