Thursday, March 29, 2007

109. ஆதியும் அந்தமும் புரியாமல் காதலில் அரங்கேறும் கலையொன்று!

இளையராஜாவின் இசை ஆளுமையை இந்தப்பாடலில் உணர முடியும். வரிகளில் பிரமாதமாக எனக்கு எதுவும் தெரியவில்லை. பருவத்து உணர்வுகள் எளிமையாக சொல்லப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். எழுதியவர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள்(வாலி என்று நினைக்கிறேன்). ஜேசுதாஸும் ஜானகியும் தங்கள் குரலினால் வசியம் செய்கிறார்கள் இந்தப்பாடலிலும்.
-------------------------------------------
படம் : அக்னி நட்சத்திரம்
இசை : இளையராஜா
வரிகள் :?
குரல் : K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
-------------------------------------------
பெ:
தூங்காத விழிகள் ரெண்டு - உன்
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத)
ஆ:
மாமர இலை மேலே.....ஆ...ஆ...!
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ?
பெ:
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தி தாலாட்டவோ?
ஆ:
நாளும் நாளும், ராகம் தாளம்
சேரும் நேரம், தீரும் பாரம்
பெ:
ஆ...ஆ...ஆ!
(தூங்காத)
பெ:
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ?
ஆ:
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கலையல்லவோ?
பெ:
மாதுளங்கனியாட, மலராட, கொடியாட,
மாருதம் உறவாடும் கலையென்னவோ?
ஆ:
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ?
பெ:
மேலும் மேலும் மோகம் கூடும்
ஆ:
தேகம் யாவும் கீதம் பாடும்
பெ:
ஆ....ஆ......ஆ.....!
(தூங்காத)

0 Comments:

Post a Comment

<< Home