106. உண்டென்னும் கண்ணும், இல்லையென்னும் இடையும் கொண்டவள்தானே மங்கை!
பழைய திரைப்படப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலை இத்தனை நாட்களாக வலைப்பூவில் ஏற்றாமல் இருந்தேனா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பாடலைக் கேட்கும்போது பின்னணி இசை உயிரை உருக்கிவிடும். அதற்கு மேலாக L.R.ஈஸ்வரியின் குரல். வெறும் Hummingஇலேயே நம்மைக் கட்டிப்போட்டு விடுவார். T.M.Sம் நன்றாகவே பாடியிருக்கிறார். கண்ணதாசன் நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறார்.
------------------------------------------------
படம் : ஆலயமணி
இசை : M.S.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M. செளந்தரராஜன் & L.R.ஈஸ்வரி
------------------------------------------------
ஆ:
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
(கல்)
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா?
(சொல்)
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
(கல்)
பெ:
ஆ......ஆ......ஆ...!
ஆ:
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
(கன்னி)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா? வண்ணக் கண்ணல்லவா?
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா? மின்னல் இடையல்லவா?
(கல்)
பெ:
ஆ......ஆ......ஆ...!
ஆ:
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி, மங்கை அமராவதி,
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி, என்றும் நீயே கதி!
(கல்)
------------------------------------------------
படம் : ஆலயமணி
இசை : M.S.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M. செளந்தரராஜன் & L.R.ஈஸ்வரி
------------------------------------------------
ஆ:
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
(கல்)
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா?
(சொல்)
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
(கல்)
பெ:
ஆ......ஆ......ஆ...!
ஆ:
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
(கன்னி)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா? வண்ணக் கண்ணல்லவா?
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா? மின்னல் இடையல்லவா?
(கல்)
பெ:
ஆ......ஆ......ஆ...!
ஆ:
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி, மங்கை அமராவதி,
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி, என்றும் நீயே கதி!
(கல்)
2 Comments:
சேரல்!
தயவு செய்து கம்பன் கண்ட "சீதை" யென மாற்றவும். இந்தப் பாடல் கண்ணதாசன்+ எம்.எஸ்.வி+
ரி.எம்.எஸ் கூட்டின் அதிசயங்கள்; அற்புதங்கள். one and only
மற்றி விட்டேன் யோகன்.
திருத்தத்திற்கு நன்றி! நீங்கள் சொல்லும் வரை இப்படி ஒரு தவறு செய்திருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை!
சீதை என்று அடிப்பதாக நினைத்து ராதை என்று அடித்திருக்கிறேன்.
I'm very sorry for the mistake that I have done
Post a Comment
<< Home