Sunday, July 09, 2006

102. ஆறு மனமே ஆறு

1964 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது. அந்த நாட்களிலேயே காதல், காமம், கடவுள் என்று பல விஷயங்களை ஆராயும் இந்தப் படத்தை எடுத்த இயக்குனரையும், படக்குழுவினரையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். கண்ணதாசனின் வரிகள், தத்துவத்தின் உச்சம்! இசையும் அருமை! T.M.S. ன் குரலும் இனிமை!
----------------------------------------------------
படம் : ஆண்டவன் கட்டளை
இசை : M.S.விஸ்வநாதன் - ராம்முர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : T.M. செளந்தரராஜன்
----------------------------------------------------
ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு,
தெய்வத்தின் கட்டளை ஆறு, தெய்வத்தின் கட்டனை ஆறு...!
(ஆறு மனமே)
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி...!
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்!
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!
இந்த இரண்டு கட்டளை அந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
எல்லா நன்மையும் உண்டாகும்!
(ஆறு மனமே)
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்!
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
உண்மை என்பது அன்பாகும்
பெரும்பணிவு என்பது பண்பாகும்!
இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
எல்லா நன்மையும் உண்டாகும்!
(ஆறு மனமே)
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்...!
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்...!
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்!
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்!
(ஆறு மனமே)

2 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

1968 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது

No it is 63 or 64

July 09, 2006 4:21 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

நன்றி Anonymous!

சரியான வருடம் 1964.
68 ஐ மாற்றி விடுகிறேன்.

இங்கு நான் சொல்ல விரும்பிய கருத்து, பழைய நாட்களிலேயே இத்தகைய படங்களைத் தைரியமாக எடுத்திருக்கிறார்கள் என்பதே!

July 09, 2006 4:38 AM  

Post a Comment

<< Home