Thursday, July 13, 2006

104. பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?

மூச்சு விடாமல் சரணத்தைப் பாடியிருப்பார் S.P.B. நல்ல முயற்சி. இளையராஜவின் இசை சுகானுபவம்.
------------------------------------------------------------
படம் : கேளடி கண்மணி
இசை : இளையராஜா
வரிகள் : பாவலர் வரதராசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!
(மண்ணில்)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்? பெண்மயில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்,
சிந்திவரும் குங்குமமுதம் தந்திடும் குமுதமும்,
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்!
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்!
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி!
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?
(மண்ணில்)

7 Comments:

Blogger பிரதீப் சொல்கிறார்.....

இதுக்கு வரிகள் பாவலர் வரதராசன்னு நினைக்கிறேன்.

இது ஒரு அருமையான பாட்டு. முதலில் பல டிராக்குகளில் பாடிய பாலசுப்பிரமணியம் பின்னர் பயிற்சி செய்து பல இசை நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பாடினாராம்.

July 13, 2006 6:07 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

நன்றி பிரதீப்!

பாவலர் வரதராசன் என்பதே சரி. மாற்றி விடுகிறேன்.

ப்ரியமுடன்,
சேரல்.

July 13, 2006 6:17 AM  
Blogger பாலசந்தர் கணேசன். சொல்கிறார்.....

பாட்டுக்கு மெட்டு என்ற வரிசையில் வருகின்ற பாடல்களில் இதுவும் ஒன்று. பாட்டுக்கு தான் மெட்டு என்ற காலம் இளையராஜா வந்த உடன் மாறி விட்டது. இது அவருடைய சகோதரரின் பாடல். ரொம்ப நாள் கழித்து பாட்டுக்கு மெட்டு போட்டார் இளையராஜா. அதிலும் கெட்டிகாரர் என்பதை நிரூபித்தார்.

July 13, 2006 6:33 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலசந்தர் கணேசன்!

தொடர்ந்து வருகை தாருங்கள்.

ப்ரியமுடன்,
சேரல்.

July 13, 2006 6:39 AM  
Blogger Osai Chella சொல்கிறார்.....

Thangal Muyarchikku en vazhthukkal. arumaiyaana thervu. thodarungal nanbaree!

"OSAI" CHELLA,
www.osai.tamil.net

July 15, 2006 11:59 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

நன்றி செல்லா!

ப்ரியமுடன்,
சேரல்.

July 16, 2006 10:11 PM  
Blogger கத்துக்குட்டி சொல்கிறார்.....

சேரல்!

என்ன ஆயிற்று? நீண்ட நாட்களாக உங்களிடமிருந்து எந்த பதிவும் வரவில்லை.. உங்கள் பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...

December 11, 2006 2:27 AM  

Post a Comment

<< Home