Friday, April 07, 2006

69. காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே!

தன் இசைக்குப் போட்டி என்று இசைஞானி இளையராஜாவால் பாராட்டப்பட்டவர் இந்த பாலபாரதி...!(ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தது). இவர் போன்ற இசைக்கலைஞர்கள் நிலைக்காமல் போனதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்? இந்தத் திரைப்படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு முன்புவரை இதன் இசையமைப்பாளர் இளையராஜா என்றுதான் நினைத்திருந்தேன்.
------------------------------------------------------------
படம் : அமராவதி
இசை : பாலபாரதி
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
------------------------------------------------------------
ஆ:
தாஜ்மகால் தேவை இல்லை, அன்னமே! அன்னமே!
பெ:
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே!
ஆ:
இந்த பந்தம் இன்று வந்ததோ?
பெ:
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ?
ஆ:
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ?
(தாஜ்மகால்)
ஆ:
பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,
பொன்னாரமே! நம் காதலோ,
பூலோகம் தாண்டி வாழலாம்!
பெ:
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்,
ஆனாலுமே நம் நேசமோ
ஆகாயம் தாண்டி வாழலாம்!
ஆ:
கண்ணீரில் ஈரமாக்கி கறையாச்சு காதலே!
பெ:
கறை மாற்றி நாமும் மெல்ல கரை ஏற வேண்டுமே!
ஆ:
நாளை வரும், காலம் நம்மைக் கொண்டாடுமே!
(தாஜ்மகால்)
பெ:
சில்வண்டு என்பது, சில மாதம் வாழ்வது,
சில்வண்டுகள், காதல் கொண்டால்,
செடி என்ன கேள்வி கேட்குமா?
ஆ:
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்,
அது ரொம்ப பாவம் என்பதா?
பெ:
வாழாத காதல் ஜோடி என் இம்மண்ணில் கோடியே!
ஆ:
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே!
பெ:
வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே..!
(தாஜ்மகால்)

0 Comments:

Post a Comment

<< Home