Monday, April 10, 2006

70. சேலை மூடும் இளஞ்சோலை

இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் இசை ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட ஒரு படம் இது...! எனக்குப் பிடித்த வரிகள்...
"கைகள் இடைகளில் நெளிகையில், இடைவெளி குறைகையில்,
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்!"

-----------------------------------------------------------
படம் : நினைவெலாம் நித்யா
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------------
பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்!
(பனி விழும்)
இனிவரும் முனிவரும், தடுமாறும் கனிமரம்!
(பனி விழும்)
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
(சேலை)
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்!
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்!
கைகள் இடைகளில் நெளிகையில், இடைவெளி குறைகையில்,
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்!
(பனி விழும்)
காமன் கோயில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம்
(காமன்)
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே!
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே!
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..!
(பனி விழும்)

2 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) சொல்கிறார்.....

//காமன் கோயில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம்//

இதில் பாலு மெலிதாக ஒரு சிரிப்புச் சிரிப்பாரே!
இப்பாட்டுக்கு மெல்லிசை மன்னருமல்லவா சேர்ந்து இசையமைத்தார்?

April 11, 2006 3:18 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

I think, Ilaiyaraaja alone composed the music for this movie.
I searched in the net as well.

April 11, 2006 8:49 PM  

Post a Comment

<< Home