Wednesday, May 17, 2006

95. மனம் ஏங்குதே!

90 களில் மிகப்பிரபலமாக இருந்த ஒரு பாடல்! ஹரிணியின் குரல் பனியை உருக்கி ஊற்றியது போன்ற ஒரு இதத்தைக் கொடுக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை! பிடித்த வரிகள்,
"புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்!"
"மலைநாட்டுக் கரும்பாறை மேலே,
தலை காட்டும் சிறு பூவைப்போலே,
பொல்லாத இளங்காதல் பூத்ததடா!"
--------------------------------------------------
படம் : நேருக்கு நேர்
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிணி
--------------------------------------------------
மனம் விரும்புதே உன்னை... உன்னை!
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே!
நினைத்தாலே சுகம்தானடா!
நெஞ்சில் உன் முகம்தானடா!
அய்யய்யோ மறந்தேனடா!
உன் பேரே தெரியாதடா!
(மனம்)
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்!
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்!
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது!
அதிலே என் மனம் தெளியும் முன்னே,
அன்பே உந்தன் அழகு முகத்தை,
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது?
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்!
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்!
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...!
(நினைத்தாலே)
மழையோடு நான் கரைந்ததுமில்லை!
வெயிலோடு நான் உருகியதில்லை!
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா!
மலைநாட்டுக் கரும்பாறை மேலே,
தலை காட்டும் சிறு பூவைப்போலே,
பொல்லாத இளங்காதல் பூத்ததடா!
சட்டென்று சலனம் வருமென்று,
ஜாதகத்தில் சொல்லலையே...!
நெஞ்சோடு காதல் வருமென்று,
நேற்றுவரை நம்பலையே!
என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!
(நினைத்தாலே)

0 Comments:

Post a Comment

<< Home