Friday, May 05, 2006

90. மரணம் மீண்ட ஜனனம் நீ.....!

நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று! பாடலின் இசையும், வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் அருமை! சின்மயிக்கு இது முதல் பாடல் என்று நினைக்கிறேன். நன்றாகவே பாடி இருக்கிறார்.ஒளிப்பதிவு செய்த ரவி.K.சந்திரனும், மணிரத்னமும் கூட பாராட்டப்பட வேண்டியவர்களே!
---------------------------------------------
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஜெயச்சந்திரன் & சின்மயி
---------------------------------------------
ஆ:
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்,
காதில் தில் தில் தில் தில்,
கன்னத்தில் முத்தமிட்டால்...!
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
(நெஞ்சில்)
பெ:
ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
(ஒரு தெய்வம்)
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே....!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே...!
(ஒரு தெய்வம்)
(நெஞ்சில்)
எனது சொந்தம் நீ.... எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ.... கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ.... சின்ன இடியும் நீ!
(செல்ல)
பிறந்த உடலும் நீ.... பிரியும் உயிரும் நீ!
(பிறந்த)
மரணம் மீண்ட ஜனனம் நீ.....!
(ஒரு தெய்வம்)
(நெஞ்சில்)
எனது செல்வம் நீ... எனது வறுமை நீ!
இழைத்தக் கவிதை நீ..... எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ.... இரவின் கண்ணீர் நீ!
(இரவல்)
எனது வானம் நீ..... இழந்த சிறகும் நீ!
(எனது)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ.....!

2 Comments:

Blogger பாரதிய நவீன இளவரசன் சொல்கிறார்.....

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயச்சந்திரன் குரலில் ஒரு பாடல்.....மலையாள பாடகர்களின் குரல் எவ்வளவுதான் இனிமையாக இருந்தாலும், சில இடங்களில் தமிழ் சொற்களைத் தவறுதலாக உச்சரிக்கும் பழக்கம் அவர்களைப் பொறுத்தவரைத் தவிக்க முடியாததாகிவிடுகிறது. இதற்கு, பாடகர்கள் மீது குறை சொல்ல இயலாவிட்டாலும், இயக்குனரையும், தமிழ் நன்கு அறிந்திருப்பின் அந்த இசையமைப்பாளரையும் இந்தத் குறைபாடிற்குக் காரணமெனலாம்.

ஜெயச்சந்திரன் பாடல்களில் அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. ஏனைய பிறமொழிப்பாடகர்களோடு ஒப்பிடுகையில், தமிழ் சொற்களை, அதிகம், தவறாக உச்சரிக்காத பாடகர் ஜெயச்சந்திரன் எனலாம்.

May 09, 2006 3:40 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

well said!

May 09, 2006 3:58 AM  

Post a Comment

<< Home