Monday, May 08, 2006

91. இதுதான் எங்கள் வாழ்க்கை!

வாலியின் வரிகளில் நல்ல அழுத்தமும், சோகமும் கலந்திருக்கின்றன. நல்ல இசை! M.G.R. படப்பாடல்களில் மிகப் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று! T.M.Sன் குரல் வளமும் பாடலுக்குச் சிறப்பு சேர்க்கிறது.
-----------------------------------------------------------
படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : வாலி
குரல் : T.M.சௌந்தரராஜன்
-----------------------------------------------------------
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்....!

கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை,

உறவைக் கொடுத்தவர் அங்கே!
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே!
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும், தொடர்ந்தால் தொடரும்,
இதுதான் எங்கள் வாழ்க்கை!
இதுதான் எங்கள் வாழ்க்கை!
(தரை மேல்)
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒருநாள் போவார், ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்!
ஒருநாள் போவார், ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்!
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினப்பது சுலபம்...!
ஊரார் நினைப்பது சுலபம்...!
(தரை மேல்)

3 Comments:

Blogger Bharaniru_balraj சொல்கிறார்.....

கண்ணதாசன் உச்சத்தில் இருந்த போது திரைத்துறைக்கு வாலி அறிமுகமானார். அதுவும் கண்ணதாசனின் ஆசியோடு படகோட்டி படத்தில் அறிமுகமானார். இந்தப்பாடல் எம் ஜி ஆர் க்கு மிகப்பெரிய மரியாதையை பெற்றுத்தந்தது. இந்தப்பாடல் மட்டுமல்லாது இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் அற்புதமான பாடல்கள்.

May 08, 2006 10:41 PM  
Blogger பாரதிய நவீன இளவரசன் சொல்கிறார்.....

மீனவர் படும் துயரை இதைவிட அற்புதமாகப் படம்பிடித்துக்காட்டிய பாடல் வரிகள் வேறு எதுவும் இல்லை.

"ஒருநாள் போவார், ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்!
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினப்பது சுலபம்...!"

மீனவ சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் எல்லா கடின உழைப்பாளி வர்க்கத்தினரின் பரிதாபகரமான வாழ்க்கை நிலைக்கும் பொருந்தும் இந்த வரிகள்.

'தாம்பரம் - சென்னை' மின்சார ரயிலில், பார்வையற்றவர் குரலில் அடிக்கடி கேட்கும் பாடல்...

May 09, 2006 3:26 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

Bharateeyamodernprince,
சத்தியம்...
வாலி சொன்னதும், நீங்கள் சொல்வதும்.

May 09, 2006 3:35 AM  

Post a Comment

<< Home