Thursday, May 04, 2006

89. காதல் சொன்ன கணமே! அது கடவுளைக் கண்ட கணமே!

இந்தப் பாடல், தமிழ்த்திரையில் "புது"க்கவிஞர்கள் பலர் நன்றாக எழுதி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. இதில் வரும் ஒவ்வொரு வரியையும் நான் ரசிக்கிறேன். படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஷங்கருக்கே உரித்தான பிரம்மாண்டம் இப்பாடலிலும் தெரியும். இந்தக் கபிலன், கவிஞர் வைரமுத்துவின் மகன் என்று நண்பர்கள் பலர் நினைத்திருந்தனர். இவர் வேறு கபிலன் என்று எனக்குத் தெரிந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லவேண்டியதாய் இருந்தது.
-------------------------------------------------------
படம் : பாய்ஸ்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : கபிலன்
குரல் : கார்த்திக் & சித்ரா சிவராமன்
-------------------------------------------------------
ஆ:
எகிறி குதித்தேன், வானம் இடித்தது!
பாதங்கள் இரண்டும் பறவையானது!
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது!
புருவங்கள் இறங்கி மீசை ஆனது
அலே அலே! அலே அலே!
அலே அலே அலே அலே அலே அலே!
(அலே)
ஆ:
ஆனந்த தண்ணீர் மொண்டு குடித்தேன்!
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்!
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்....
ஒரு எறும்பாய்...!
பெ:
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்.....
ஒரு இலையாய்.....!
(அலே..)
ஆ:
காதல் சொன்ன கணமே! அது
கடவுளைக் கண்ட கணமே!
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ!
(காதல்)
(எகிறி)
ஆ:
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே!
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே!
பெ:
வெண்ணிலவை இவன் வருடியதும்,
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்!
ஆ:
ஒரு விதை இதயத்தில் விழுந்தது,
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே!
(அலே)
பெ:
கலங்காத குளம் என இருந்தவள்
ஒரு தவளை தான் குதித்ததும் வற்றி விட்டேன்
(காதல்)
(எகிறி)
பெ:
மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
ஆ:
கரை முழுதும் உந்தன் சுவடுகளா?
அலை முழுதும் உந்தன் புன்னகையா?
பெ:
காகிதம் என் மேல் பறந்ததும்,
அது கவிதை நூலென மாறியதே!
(அலே)
ஆ:
வானவில் உரசியே பறந்ததும்,
இந்த காக்கையும் மயிலென மாறியதே...!
(காதல்)
(எகிறி)

5 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

//புருவங்கள் இறங்கி மீசை ஆனது//

இதுக்கு என்னங்க அர்த்தம்? கண்களும் மூக்கும் காணாமப் போயிடிச்சா?

//ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்//

ஒவ்வொரு பல்லிலுமா? பற்களிலுமா? பாடலாசிரியர்கள் கொஞ்சம் தமிழ் இலக்கணத்தையும் படிப்பது நல்லது.

இப்பாடல் படமாக்கப்பட்ட 60 கேமிராக்கள் தொழில்நுட்பத்தைப் படத்தின் முக்கியமான வேறொரு காட்சிக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

பாடிய விதம் கேட்க நன்றாக இருக்கிறது. இதுபோன்ற சில குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.

மிக அருமையான பாடல்களின் வரிகளைத் தருவதற்கு நன்றி.

கமல்

July 07, 2006 4:28 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

தங்களின் கருத்துக்கு நன்றி கமல்!
இப்படியெல்லாம் பாத்தீங்கன்னா,

"சல சல சல சல ரெட்டைக்கிளவி
தக தக தக தக ரெட்டைக்கிளவி"

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!"

இப்படி நிறைய இருக்கு!

தமிழே இல்லாம வருகிற பல பாடல்களுக்கு நடுவில், இந்த மாதிரி தமிழ் நிறைந்த பாடல்களும் வருகின்றன அப்படின்னு நாம சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

இருப்பதில், நல்லதை மட்டுமே பார்த்து ரசிப்போமே!

ப்ரியமுடன்,
சேரல்.

July 07, 2006 4:44 AM  
Anonymous Subramani சொல்கிறார்.....

"சல சல சல சல ரெட்டைக்கிளவி
தக தக தக தக ரெட்டைக்கிளவி"

இதில் என்ன குற்றம் கண்டீர்கள்?
எனக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

December 23, 2010 12:42 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

இரட்டைக்கிளவி என்கிற பதம் உணர்த்துவது போல, இரண்டு வார்த்தைகள் தான் இருக்க வேண்டும். பொருளற்ற ஒரு வார்த்தை இரண்டே முறை மட்டும் தொடர்ந்து வந்து ஒரு பொருளைத் தருமானால் அது இரட்டைக்கிளவி எனப்படும். எடுத்துக்காட்டு : சல சல, வழ வழ, கல கல, திடு திடு, தக தக.....

-ப்ரியமுடன்
சேரல்

December 23, 2010 4:05 AM  
Blogger சமுத்ரா சொல்கிறார்.....

நிறைய பேர் இப்படி தான் எழுதுகிறார்கள். கேட்டால் எண் வழுவமைதி என்கிறார்கள்.சினிமாப் பாட்டுகளில் பன்மை அவ்வளவாக எழுதப்படுவது இல்லை.
வாலி தான் 'உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன' என்று இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவார்.

January 09, 2012 10:13 PM  

Post a Comment

<< Home