Monday, May 01, 2006

87. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!

இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் பாடல் படமாக்கப்பட்ட விதம். ஒரு நல்ல திரைக்கதையை இந்தப் பாடலிலேயே சொல்லியிருப்பார் ஜீவா. வைரமுத்துவின் வரிகளும் இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். எனக்குப் பிடித்த வரிகள்,
"கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்,
கனுக்கள் தோறும் முத்தம்!
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்,
கைகள் முழுக்க ரத்தம்!
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?"

---------------------------------------------------------
படம் : உள்ளம் கேட்குமே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன்
---------------------------------------------------------
ஓ மனமே! ஓ மனமே!
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே! ஓ மனமே!
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத் தானே யாசித்தோம்,
கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்,
கூழாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே)
மேகத்தை இழுத்து, போர்வையாய் விரித்து,
வானத்தில் உறங்கிட ஆசையடி!
நம் ஆசை உடைத்து, நார் நாராய்க் கிழித்து,
முள்ளுக்குள் எரிந்தது காதலடி!
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்,
கனுக்கள் தோறும் முத்தம்!
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்,
கைகள் முழுக்க ரத்தம்!
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே)
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து,
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை!
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து,
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை!
இன்பம் பாதி துன்பம் பாதி,
இரண்டும் வாழ்வின் அங்கம்!
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்,
நகையாய் மாறும் தங்கம்!
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!
வெற்றிக்கு அதுவே ஏணியடி!
(ஓ மனமே)

2 Comments:

Blogger ப்ரியன் சொல்கிறார்.....

"தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!
வெற்றிக்கு அதுவே ஏணியடி!"

இந்த இரு வரிகளுக்காகவே இந்தப் பாடல் மிகவும் பிடித்தமானது சேரல்.அருமையாக பாடல் அதை இங்கே தந்தமைக்கு நன்றி

May 02, 2006 12:36 AM  
Anonymous Anonymous சொல்கிறார்.....

This song sure has some power. I don't know. It might be music or lyrics or anything. But it is sure whenever i hear it, it gets me to my college day.

July 14, 2006 7:05 AM  

Post a Comment

<< Home