Friday, April 28, 2006

85. மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல!

காலத்தை வென்ற ஒரு படத்தில் இடம்பெற்ற காலத்தை வென்ற ஒரு பாடல். இந்தப் பாடலை எந்த விதத்தில் பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. பாடலைக் கேட்ட, பார்த்த எல்லோருக்கும் இதன் சிறப்பு தன்னால் புரியும்.
---------------------------------------------------
படம் : குணா
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : கமல்ஹாசன் & ஜானகி
----------------------------------------------------
ஆ:
கண்மணி அன்போடு காதலன் நான், நான்,
எழுதும் லெட்டர், சீ மடல், இல்ல கடுதாசி வச்சுக்கலாமா?
வேண்டாம் கடிதமே இருக்கட்டும்! படி
பெ:
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!
ஆ:
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்,
மொதல்ல கண்மணி சொன்னேல்ல,
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா?
நான் இங்க சௌக்கியம்!
பெ:
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்கியமே!
ஆ:
உன்னை நெனச்சி பாக்கும் போது,
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது!
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
பெ:
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
ஆ:
அதான்
பெ:
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஆ:
அதே தான்! பிரமாதம்! கவிதை! படி
பெ:
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா? நான் இங்கு சௌக்கியமே!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது!
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ!
(கண்மணி)
ஆ:
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்,
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல,
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை!
இதுவும் எழுதிக்கோ!
நடுவுல நடுவுல மானே, தேனே, பொன் மானே,
எல்லாம் போட்டுக்க!
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்,
உன் உடம்பு தாங்குமா? தாங்காது!
அபிராமி! அபிராமி! அபிராமி!
பெ:
அதையும் எழுதணுமா?
ஆ:
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம,
ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது,
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!
அதையும் தாண்டி புனிதமானது!
பெ:
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே! பொன் மானே!
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்,
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....!
எந்தன் காதல் என்னெவென்று,
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்,
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது!
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல!
அதையும் தாண்டி புனிதமானது!
ஆ:
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா?
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா?
பெ:
சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!

3 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

"புண்ணியம் செய்தனமே பாடலே
கருப்பு வெள்ளை சேரன்
தளம் தன்னில் இடம்பிடித்ததற்கே"

-ஞானசேகர்

April 28, 2006 4:46 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

En ippadi?

April 28, 2006 5:19 AM  
Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

ஏன்னா, நானும் இந்தப் பாடல் வரும் வரும் வரும் வரும் வரும் வரும் (புரிகிறதா?) என காத்திருந்தேன். ரொம்ப தாமதம்.

77வது பாடலாக போட்டிருந்தால், பாடலும் அதன் பொருளோடு நன்கு ஒத்துப்போய் இருந்திருக்கும்.

அது சரி. இப்படத்தின் பெயர்க்காரணம் என்ன? "பார்த்தவிழி பார்த்தபடி" பாடலில், காவித்துணி பறக்கும் காட்சியின் பொருள் என்ன?

இப்புடி எல்லாம் கேட்டாதான், கொஞ்சம் சுவராஸ்யமாய் (சுவாரஸ்யாமாய் - எது சரி?) இருக்கும்.

-ஞானசேகர்

April 29, 2006 1:51 AM  

Post a Comment

<< Home