Friday, July 07, 2006

99. ரண்டக்க ரண்டக்க ரண்டக்க!

மிகப் பிரபலமான பாடல். கிராமிய மணத்தோடான வரிகளின் மூலம் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் வைரமுத்து. ஹாரிஸ் ஜெயராஜின் இசை காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது. புதுப்பாடகி சைந்தவி நன்றாகவே பாடி இருக்கிறார். பாடலின் ஒவ்வொரு கணத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் கலை இயக்குனரையும், ஷங்கரையும் பாராட்டலாம். குறிப்பாக, புடவை போல அமைக்கப்பட்ட சாலை, முண்டாசு கட்டிய வாகனங்கள், முகங்களோடு கூடிய பாறைகள் இவற்றைச்சொல்லலாம். எனக்குப் பிடித்த வரிகள்,
"இசக்கிக் கடை பிசிறு முட்டாயே!"
"டெண்டு கொட்டாய் இன்டர்வெல் முறுக்கே!"
"சுட்டப் பால் போல தேகம் தான்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு!"

------------------------------------------------
படம் : அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : கே.கே, சைந்தவி & ஜாஸி கிப்ட்
------------------------------------------------
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஆ:
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலம்மா
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலம்மா

ஆ:
அண்டங்காக்கா கொண்டைக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க...
ஆ:
அச்சு வெல்லத் தொண்டைக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க...
ஆ:
ஐ ஆர் 8 பல்லுக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க...
ஆ:
அயிரை மீனு கண்ணுக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டாக்க டங்குடக்கா...
ஆ:
பூவாலொரு போடு போட்டா சைவக்காட்டு வேட்டைக்காரி!
பெ:
காதல் பச்சோந்தி, ராவில் பூச்சாண்டி
பச்சத்தண்ணிய ஒத்தப்பார்வையில் பத்த வச்சாண்டி!
ஆ:
ஏ! தண்ணிக்குடி தாண்டி,உன் தாவணி தொட்டேன்டி!
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டி!
(அண்டங்காக்கா)
பெ:
ஏ! சீ.. வா, என்று ஏவல் செய்வாயோ?
ஆ! ஹூம்.. ஹே, என்று கூவச்செய்வாயோ?
ஆ:
இஞ்சி மரப்பா இடுப்பப் பாத்து கசங்கிப் போனேன்டி!
ஈர உதட்டுல சூடு பரப்பி இஸ்திரி போடேன்டி!
பெ:
ஜாங்கு ஜக்க ஜாலக்காரா!
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
பப்பரப்ப பாடிக்காரா!
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
உன்னைத்தேக்கடியில் யானை போல நெனைச்சேன்!
உன்னைத்தேக்கடியில் யானை போல நெனைச்சேன்!
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்!
(அண்டங்காக்கா)
ஆ:
மா பலா வாழை முக்கனி நீயோ?
சா பூ த்ரீ போட்டு சாப்பிடுவேனோ?
பெ:
பழந்தின்னி வவ்வா பல்லு படாம கவ்விக்கொள்வாயா?
ரெட்டை வாழைப்பழத்தப் போல ஒட்டிக்கொள்வாயா?
ஆ:
இசக்கிக் கடை பிசிறு முட்டாயே!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
டெண்டு கொட்டாய் இன்டர்வெல் முறுக்கே!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
சுட்டப் பால் போல தேகம் தான்டி உனக்கு
சுட்டப் பால் போல தேகம் தான்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு!
(அண்டங்காக்கா)

2 Comments:

Blogger siva gnanamji(#18100882083107547329) சொல்கிறார்.....

அண்டங் காக்கா தொண்டக்காரி.......
அய்யோ...அய்யோ....

July 08, 2006 2:25 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

நண்பரே!
உங்கள் கருத்தைத் தெளிவாகச் சொல்ல முயலுங்கள்.

//அண்டங் காக்கா தொண்டக்காரி//
என்பதுதான் சரியான வரி என்று நீங்கள் சொல்ல விரும்பினால்,
மன்னிக்கவும், உங்கள் கருத்து தவறு!

இங்கு இடம்பெற்றிருக்கும் வரிகள் சரியானவையே!

ப்ரியமுடன்,

July 09, 2006 1:45 AM  

Post a Comment

<< Home