98. ஊர்வலம் போகிறாள், காதல் தேவதை!
இந்த அற்புதமான காதல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை. நல்ல மென்மையான இசை! ரசிக்கத்தகுந்த பாடல்.
-----------------------------------------------------
படம் : ஈரமான ரோஜாவே
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : மனோ
-----------------------------------------------------
அதோ மேக ஊர்வலம்,
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!
(அதோ)
உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!
(அதோ)
குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!
தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!
பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!
காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?

2 Comments:
//உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!
//
சேரல்,
நானும் மிக இரசித்த வரிகள் இவை. கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல் என நினைக்கிறேன். பாடகர் மனோவுக்கு விருது வாங்கித்தந்த பாடல்!
நன்றி அருள் குமார்!
நல்ல தகவல்களை அளித்திருக்கிறீர்கள்.
"முத்துலிங்கம்" சரியா என்று பார்த்துவிட்டு சேர்த்துவிடுகிறேன்.
ப்ரியமுடன்,
சேரல்.
Post a Comment
<< Home