Wednesday, April 18, 2007

112. மயங்குகிறாள் ஒரு மாது, காத(ல/லி)ன் பிரிவில்

மிக அருமையான மெட்டு. கேட்கும்போது மனதை உருக்கிவிடும்படியாக அமைத்திருக்கிறார் இளையராஜா. படலுக்கேற்ற குரல் தேர்வு. இதே மெட்டை, இந்த வருடம் வெளியான 'அநுமனாஸ்பதம்' என்ற தெலுகு படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா. பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கிறார். பாடல் வரிகள்
'ப்ரதி க்ஷணம் நீ தர்ஷனம் மரி தொரக்குனா தொரக்குனா?'
-----------------------------------------------
படம் : நானே ராஜா நானே மந்திரி
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : ஜெயச்சந்திரன் & P. சுசீலா
-----------------------------------------------
பெ:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
(மயங்கினேன்)
ஆ:
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
பெ:
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
ஆ:
இரு கண்ணும் என் நெஞ்சும்
பெ:
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
(மயங்கினேன்)
ஆ:
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
பெ:
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
ஆ:
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
பெ:
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
ஆ:
அந்த நாளை எண்ணி நானும்
பெ:
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்
(மயங்கினேன்)

0 Comments:

Post a Comment

<< Home