Wednesday, April 18, 2007

113. ஏலே...ஏலேலே...! ஏலே...ஏலேலே...!

சமீப நாட்களில் தொலைக்காட்சியிலும், பலரின் மனத்திலும் பெருவாரியாக இடம் பிடித்திருக்கும் ஒரு பாடல் இது. யுவனின் இசை, தனித்தன்மையோடு ஒலிக்கிறது. சினேகனின் வரிகளில் தமிழும், கிராமிய மணமும் தவழ்கின்றன (வைரமுத்துவின் பாசறையில் பயின்றவர் அல்லவா?). கிருஷ்ணராஜ் என்ற அருமையான பாடகர் எப்போதாவதுதான் இப்படி நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறார் என்பது வருத்தமான விஷயம்தான். சமீபத்தில் தமிழ் ரசிகர்களை மயக்கும் ஒரு குரலுக்குச் சொந்தக்காரர் ஷ்ரேயா கோஷல். பிறப்பால் ஒரு பெங்காலியாகவும், ராஜஸ்தானில் வளர்ந்தும் இருக்கும் இவர் தமிழின் 'ழ'கரத்தை தெளிவாக உச்சரிப்பது ஆச்சர்யமே!('முன்பே வா என் அன்பே வா!' என்று நம்மைக் கட்டிப்போட்டவர் இவர்தான்.)
--------------------------------------------
படம் : பருத்திவீரன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
குரல் : மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா
--------------------------------------------
மா:
ஏலே...ஏலேலே...! ஏலே...ஏலேலே...!
ஒத்த பன மரத்துல செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன், சங்கதிய சொல்லித் தரேன்
வாடி..நீ வாடி!
பத்துக்கல்லு பாலத்துல மேச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ள, கூச்சம் கீச்சம் தேவை இல்லை
வாடி..நீ வாடி!
ஏலே...ஏலேலே...!
செவ்வாழ நீ சின்னக்கனி! உன்ன
செறையெடுக்கப் போறேன் வாடி!
ஸ்:
ஐயயோ!
என் உசுருக்குள்ள தீய வச்சான் ஐயயோ!
என் மனசுக்குள்ள நோயத் தச்சான் ஐயயோ!
கி:
சண்டாளி உன் பாசத்தால, நானும்
சுண்டெலியா ஆனேம்புள்ள
ஸ்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
ஐயயோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே ஐயயோ!
என் சமஞ்ச தேகம் சாயுறதே ஐயயோ!
கி:
அரளி வெத வாசக்காரி
ஆளக் கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்சக் கீறி
நீ உள்ள வந்த கெட்டிக்காரி
ஐயயோ...
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே ஐயயோ!
என் மீச முறுக்கு மடங்கிப் போச்சே ஐயயோ!
ஸ்:
கல்லுக்குள்ள தேர போல
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா?
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா?
யு:
ஓஹோ....!
ஸ்:
ஐயனாரப் பாத்தாலே உன் நினப்பு தான்டா!
அம்மிக்கல்லு பூப்போல ஆகிப்போச்சு ஏன்டா?
நான் வாடாமல்லி...நீ போடா அல்லி!
கி:
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே! நீ
தொட்டா அருவா கரும்பாகுதே!
(தொரட்டி)
(சண்டாளி)

2 Comments:

Blogger J.S.ஞானசேகர் சொல்கிறார்.....

//கல்லுக்குள்ளா தேளப் போல//

"கல்லுக்குள்ள தேரப் போல" என வரவேண்டும் என நினைக்கிறேன்.

-ஞானசேகர்

April 19, 2007 2:48 AM  
Blogger சேரல் சொல்கிறார்.....

நன்றி சேகர்!
தவறுகளைத் திருத்திவிட்டேன்.

-ப்ரியமுடன்,
சேரல்

April 19, 2007 5:20 AM  

Post a Comment

<< Home