Thursday, April 19, 2007

114. அவளும் ஒரு நிலா

நல்ல சந்தம் அமைந்த ஒரு பாடல். கடினமான மெட்டுக்குள் வார்த்தைகளை அழகாக அடுக்கி இருக்கிறார் கண்ணதாசன். S.P.Bன் ஆரம்ப காலப் பாடல்களில் நன்கு பிரபலமான ஒரு பாடல் இது.
---------------------------------------------
படம் : பட்டிணப்பிரவேசம்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------
வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா
(வான்)
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான்)
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா? ஊடலா? கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான்)
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
(வான்)

0 Comments:

Post a Comment

<< Home