Tuesday, April 11, 2006

76. நானாக நானில்லை தாயே!

வாலியின் வரிகளும், இளையராஜாவின் இசையும் இப்பாடலின் சிறப்பம்சங்கள்.
-----------------------------------------------
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------
நானாக நானில்லை, தாயே!
நல்வாழ்வு தந்தாயே நீயே!
பாசம், ஒரு நேசம்,
கண்ணாரக் கண்டான் உன்சேயே.....!
(நானாக)
கீழ் வானிலே ஒளி வந்தது.
கூட்டை விட்டு கிளி வந்தது.
நான் பார்க்கும் ஆகாயம்,
எங்கும் நீ பாடும் பூபாளம்!
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்!
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்,
மலர் தூவிய மஞ்சங்களும்,
தாய் வீடு போலில்லை!
அங்கு தாலாட்ட ஆளில்லை!
கோயில் தொழும் தெய்வம்,
நீயின்றி நான் காண வேறில்லை....!
(நானாக)

3 Comments:

Blogger G.Ragavan சொல்கிறார்.....

எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலைக் கேட்டால் எனது அம்மாவின் முன் நான் பாடுவது போல இருக்கும். அம்மா என்றழைக்காத பாடலும் அம்மா பாட்டுதான். ஆனால் இந்தப் பாட்டு அதை விட ஒரு பத்து படி மேல் என்பது என் கருத்து.

April 12, 2006 1:37 AM  
Blogger கோவி.கண்ணன் சொல்கிறார்.....

இதே போன்றே,
அம்மா வென்ற ழைக்காத உயிரில்லையே, அம்மவை வணங்காது உயர்வில்லையே - மன்னன்

காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா.... போன்ற அம்மா பாடல்களையும் வாலிதான் எழுதியுள்ளார்

வாலி அம்மாவுக்கு லாலி பாடுவதில் வல்லவர்

April 12, 2006 1:49 AM  
Blogger ஜெ. ராம்கி சொல்கிறார்.....

I want to dedicate this song to Vaiko! :-)

April 12, 2006 1:56 AM  

Post a Comment

<< Home