Wednesday, April 12, 2006

77. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்!

வைரமுத்துவின் அற்புதமான வரிகளில், ஜேசுதாஸ் பாடியிருக்கும் பாடல். தத்துவப்பாடல் என்றதும் நினைவுக்கு வரும் சில பாடல்களில் இதுவும் ஒன்று! இந்தத் திரைப்படம் வெளிவந்த அடுத்த வருடத்தில் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்திலும் "ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்" என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடலையும் எழுதியவர் வைரமுத்துதான்.
----------------------------------------------------------
படம் : படிக்காதவன்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத்)
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!
சிந்தினேன், ரத்தம் சிந்தினேன்,
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை, அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்டி, என்னோடு மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி, என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரை)
நேத்து இவன் ஏணி, இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து, ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்,
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரை)

0 Comments:

Post a Comment

<< Home