Thursday, April 20, 2006

78. இது என்ன கடவுளே! புரியாது கடவுளே!

சமீப காலங்களில் நான் ரசித்த சில பாடல்களில் ஒன்று. சில வரிகளுக்கான பொருள் புரியவில்லை என்றாலும் நன்றாகவே எழுதி இருக்கிறார் முத்துக்குமார். கமலின் குரல் இந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறது. தான் நடிக்காத படத்துக்காக, கமல் பாடும் இரண்டாவது பாடல் இது என நினைக்கிறேன் ( இதற்கு முன் உல்லாசம் படத்தில் "முத்தே முத்தம்மா!" பாடல் பாடினார்). பாடல் வரிகள் எழுதி அனுப்பிய நண்பன் சுரேஷிற்கு நன்றி!எனக்குப் பிடித்த வரிகள்,
"காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்"

------------------------------------------------------
படம் : புதுப்பேட்டை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : கமல்ஹாசன்
------------------------------------------------------

நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
கத்திக் கண்ணின் இருபுறம் தெரியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
வேரோடு சாயும் இந்த காடே தரையாகும்....!

எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிற்கிறான்
மார்கெட்டில் முறைக்கிறான்
என்னை போட்டுத்தள்ள துடிக்கிறான்

எங்கேயும் வருகிறான்
எமனாகத் தொடர்கிறான்
முகமாற்றி அலைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்!

அவன் முந்துவானா?
நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்

உடையும் மேகம் மழையாய்ப் பொழியும்
உதைக்கும் பந்துவேகமாய்ப் போகும்
இது என்ன கடவுளே!

புரியாது கடவுளே!
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் தின்னும்...!

ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணைத் திறந்திரு
ஓய்வாகப் படுப்பது
அது கல்லறையில் கிடைப்பது

போகின்ற பாதைகள்
பலபேரும் போனது
புதிதாகப் பிறந்திட
நான் புத்தனில்லைவழிவிடு

இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா?

காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்....!

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

இத ஒரு பார்வை பாருங்க, புரிய வாய்ப்பிருக்கு...
http://urpudathathu.blogspot.com/2005/12/101.html

April 21, 2006 1:19 PM  

Post a Comment

<< Home