Thursday, April 27, 2006

80. கோலம்...! திருக்கோலம்!

வைரமுத்து இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லும்போது, "கண்மூடி இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் வீட்டுப்பெண் மணக்கோலத்தில் விடை பெற்றுச் செல்வது போல் தோன்றும்" என்று சொல்வார். உண்மைதான். நடிகர் திலகத்தின் நடிப்பை நான் மிகவும் ரசித்த சில படங்களில் இதுவும் ஒன்று! இசை அமைப்பாளர் யார் என்று தெரியவில்லை.
-----------------------------------------------------------
படம் : அன்புள்ள அப்பா
இசை : ஷங்கர் கணேஷ்
வரிகள் : வைரமுத்து
குரல் :K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------
மரகத வள்ளிக்கு மணக்கோலம் - என்
மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்!
கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தாள்,
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்?
கோலம்...! திருக்கோலம்! கோலம்....! திருக்கோலம்!
(மரகத)
காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்!
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்!
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்!
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்!
கட்டித்தங்கம் இனிமேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ?
கட்டிக்கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அனிவாளோ?
தினந்தோறும் திருநாளோ?
(மரகத)
மலரென்ற உறவு பறிக்கும் வரை..!
மகளென்ற உறவு கொடுக்கும் வரை!
உறவொன்று வருவதில் மகிழ்ந்துவிட்டேன்!
உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்!
எந்தன் வீட்டுக் கன்று இன்று
எட்டி எட்டிப் போகிறது!
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது!
இமைகள் அதை மறைக்கிறது!
(மரகத)

5 Comments:

Blogger Sud Gopal சொல்கிறார்.....

Late 1980's -> AVM production -> Default Muic director -> Chandra Bose.

April 28, 2006 12:24 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொல்கிறார்.....

உங்களுடய பதிவை முதல் முறை காண்கிறேன். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். உங்களுடய கருத்துக்களை சொல்லி இருப்பது நன்றாக உள்ளது.

April 28, 2006 12:55 AM  
Blogger G.Ragavan சொல்கிறார்.....

மிகவும் அருமையான பாடல். அன்புள்ள அப்பா படத்தில் இருந்து. எனக்கு மிகவும் பிடிக்கும். பாடலுக்கு இசை சங்கர் கணேஷ். இதே போல கங்கை அமரன் இசையில் பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே என்று ஒரு பாட்டு நீதிபதி படத்தில் உண்டு. அதும் சிறப்பே. ரொம்ப நல்லா இருக்கும். கேட்டுப் பாருங்க.

April 28, 2006 2:24 AM  
Blogger shreepathy padhmanabha சொல்கிறார்.....

music by shankar ganesh

May 18, 2007 7:34 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

இசையமைப்பாளரின் பெயரைத் தந்தமைக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

May 22, 2007 1:27 AM  

Post a Comment

<< Home