84. ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
காதலின் காய்ச்சலில் புலம்பும் கவிஞனின் வார்த்தைகள்தான் என்றாலும், கவிதை வரிகள் மனதைத் தொடுகின்றன.
--------------------------------------------
படம் : லவ் டுடே
இசை : சிவா
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன்
--------------------------------------------
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!

1 Comments:
உன்னி கிருஷ்ணனின் இனிமையான குரலும் கண்ணாடி அணிந்த விஜயின் இளமையான தோற்றமும் சேர்த்து எனக்குள் ஒரு மென்மையான உணர்வைத்தட்டி எழுப்பும் இந்த இதமான பாடற்காட்சியை ஞாபகத்திற்குக் கொண்டுவந்ததற்கு நன்றி.
Post a Comment
<< Home