Thursday, April 19, 2007

116. ஏதேதோ நடக்கிறது காதலில்

தன் முதல் படத்திலேயே எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் G.Vபிரகாஷ்குமார். இப்போதிருக்கும் இளைய தலைமுறைப் பாடலாசிரியர்களில் முன்னணியிலிருப்பவர் நா.முத்துக்குமார். ஒரு திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுத வாய்ப்பளிக்கப்படுகிற சில பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். அப்படிக்கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே வருகிறார் முத்துக்குமார். பாடலின் காட்சியமைப்பு அருமை! படமும் கூடத்தான். கேன்ஸ் திரப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவிருக்கிறது. பிரகாஷ்ராஜை அடுத்து, தன் தயாரிப்பில் வெளிவரும் படங்களும் மிகத்தரமானவை என்று நிருபித்திருக்கிறர் இயக்குனர் ஷங்கர். எனக்குப் பிடித்த வரிகள்,
"அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசிப் பேசி விடியுது இரவு"
------------------------------------------
படம் : வெயில்
இசை : G.V.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : ஷங்கர் மஹாதேவன் & ஷ்ரேயா கோஷல்
------------------------------------------
பெ:
உருகுதே மருகுதே ஒரே பர்வையாலே!
உலகமே சுழலுதே உன்னப் பார்த்ததாலே
ஆ:
ஏ! தங்கம் உருகுதே! அங்கம் கரையுதே!
வெட்கம் உடையுதே! முத்தம் தொடருதே!
பெ:
சொக்கித்தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா!
(உருகுதே)
ஆ:
ஏய்...அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசிப் பேசி விடியுது இரவு
பெ:
ஏழு கடல் தாண்டித்தான், ஏழு மலை தாண்டித்தான்
என் கழுத்து மச்சங்கிட்ட ஓடி வரும் மனசு
ஆ:
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பாக்குறேன்
பெ:
காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப் போகிறேன்
ஆ:
சாமி பாத்துக் கும்பிடும்போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே!
(உருகுதே)
ஆ:
ஊர விட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
பெ:
கூரப்பட்டு சேலதான் வாங்கச் சொல்லிக் கேக்குறேன்
கூடுவிட்டுக் கூடுபாயும் காதலால சுத்துறேன்
ஆ:
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
பெ:
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா?
ஆ:
ஓ....! மையிட்ட கண்ணே உன்ன மறந்தா
இறந்தே போவேன்!
(உருகுதே)

0 Comments:

Post a Comment

<< Home