Friday, April 20, 2007

123. பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்

அற்புதமான கவிதை வரிகள். கட்டுக்களைக் களைந்து பறக்கத் துடிக்கும் இளமையின் வேகம்! நல்ல மெட்டில் அமைந்த பாடல். கீரவாணி என்ற இயற்பெயரைக் கொண்ட மரகதமணி தெலுகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர். என்னை உற்சாகப் படுத்தும் சில பாடல்களில் ஒன்று இது! எனக்குப் பிடித்த வரிகள்,
"பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்"
"கவலையை விற்று கவிதை கொஞ்சம் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்"

----------------------------------------
படம் : வானமே எல்லை
இசை : மரகதமணி
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
----------------------------------------
சோகமினியில்லை அட இனி வானமே எல்லை
தூரமினியில்லை அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானமிருந்தால் அட நல்லது
தகு திகு தகு திகு தகத தக ஹே!
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி!
(சோகம்)
உறவுகள் வேண்டாம் உலகமெங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரமிருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா?
வாழ்வோமே இதிலே பத்தியமா
(சோகம்)
உலகினை விற்று நிலவுலோகம் வாங்கலாம்
நிலவினை விற்று வானம் கொஞ்சம் வாங்கலாம்
கவலையை விற்று கவிதை நூல்கள் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை இருபது வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு!
வாழ்வோமே இதுவே உத்தரவு!
(சோகம்)

1 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

இதே சாயலில் அமைந்த "புத்தம்புது பூமி வேண்டும்" என்ற திருடா திருடா பாடலும் அருமையானது.

-ஞானசேகர்

April 22, 2007 8:34 PM  

Post a Comment

<< Home