Monday, November 05, 2007

134. கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்!

சமீப காலங்களில், நான் பார்க்கவும் கேட்கவும் மிக விரும்புகின்ற ஒரு பாடல் இது. அழகான சந்தம், வார்த்தைகளைக் காயப்படுத்தாத பின்னணி இசை என்று மயக்குகிறார் யுவன். தமிழ்த்திரையிசையுலகின் தற்போதைய வெற்றிக்குதிரை இவரே! நா.முத்துக்குமார் தன்னை ஒவ்வொரு பாடலிலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். இந்தப் பாடுபொருள் இப்போது வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்று! கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் நா.முத்துக்குமார். இந்தப் பாடலை இதைவிட அழகாகப் படமாக்க முடியாது எனும்படிச் செய்திருக்கிறார்கள் வசந்த் மற்றும் குழுவினர். சுட்டிக்குழந்தைகள் பாடலின் அழகம்சம். ஷங்கர் மகாதேவன், பிருத்வி ராஜ் பாடலின் சிறப்பம்சங்கள். எனக்குப் பிடித்த வரிகள்,
"எப்போதும் இவன் மீது பால்வாசனை,
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை?"

"கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்!"
----------------------------------------------
படம் : சத்தம் போடாதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : ஷங்கர் மகாதேவன்
----------------------------------------------
அழகுக்குட்டிச் செல்லம் உன்னை
அள்ளித்தூக்கும்போது, உன்
பிஞ்சு விரல்கள் மோதி - நான்
நெஞ்சம் உடைந்து போனேன்.
ஆளைக் கடத்திப்போகும் உன்
கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் - நான்
திரும்பிப் போகமாட்டேன்.
அம்மு நீ...! என் பொம்மு நீ...!
மம்மு நீ! என் மின்மினி!
உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியலை
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை!
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு?
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி?

ஜிஞ்சனிஞ்ச ஜிஞ்சனிஞ்ச ஜிஞ்சனி,
மஞ்சனிஞ்ச மஞ்சனிஞ்ச மஞ்சனி
(அழகு)
ரோஜாப்பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்.
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தகதிமிதா ஜதி பேசும்.
எந்த நேரம் ஓயாத அழுகை!
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை?
எப்போதும் இவன் மீது பால்வாசனை,
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை?
எந்த நாட்டைப்பிடித்துவிட்டான்
இப்படி ஓர் ரட்டினக்கால் தோரணை! தோரணை!
(ஜிஞ்ச)
(அழகு)
நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்.
நீ சிணுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்.
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழந்தபடி நீ ஓட்டிப் போவாய்!
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்,
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்!
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி
ஓடுகின்ற கண்ணனே!
புன்னகை மன்னனே!
(ஜிஞ்ச)
(அழகு)

0 Comments:

Post a Comment

<< Home