Thursday, July 05, 2007

131. ஆயிரம் வாசல் இதயம்

தத்துவத்தோடு கதையின் கருவையும் சொல்வது கண்ணதாசனின் சிறப்பு! இந்தப் பாடலும் அப்படி அமைந்த ஒன்றுதான். A.M.ராஜாவின் மெட்டுக்களை சுலபமாக அடையாளம் கண்டுவிட முடியும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அமைந்து, பலரின் மனத்தைக் கொள்ளை கொண்ட திரைப்படம் இது. P.B.ஸ்ரீநிவாஸின் குரல், தமிழ்த்திரையிசை உலகுக்குக் கிடைத்த ஒரு வரம் என்றே சொல்லலாம். இவரின் தாய்மொழி கன்னடம் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------
படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
இசை : A.M.ராஜா
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.B.ஸ்ரீநிவாஸ்
------------------------------------------------------
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
(நினை)
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினை)
ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார், யாரோ இருப்பார், வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினை)
எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை, இதுதான் பயணம், என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
(நினை)

2 Comments:

Blogger  Subramanian சொல்கிறார்.....

இசை அமைத்தது ஏ.எம்.ராஜா அல்ல.மெல்லிசை இரட்டையர் எம்.எஸ்.விஸ்வ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி.தயவு செய்து சரிபாருங்கள்.

July 05, 2007 5:48 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

கருத்துக்கு நன்றி!
ஆனால் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா என்பதே சரி!

-ப்ரியமுடன்
சேரல்

July 05, 2007 10:49 PM  

Post a Comment

<< Home