Wednesday, May 09, 2007

130. உலக வாழ்க்கை நடனம்

மொழிமாற்றம் செய்யப்பட்ட படப்பாடல்களில் நன்றாக அமைந்த சில பாடல்களில் இதுவும் ஒன்று. 'சாகர சங்கமம்' என்ற பெயரில் விஸ்வநாத் இயக்கிய தெலுகு திரைப்படத்தின் தமிழாக்கமே சலங்கை ஒலி. இளையராஜா இசை ஆட்சி நடத்தியிருக்கிறார். வைரமுத்துவின் வரிகள் தாளத்தோடு சேர்ந்து தத்துவம் பேசுகின்றன. திரையில் கமலின் நடிப்பும், நடனமும் முதன்மை பெற்றுவிடுகின்றன. எனக்கு மிகப் பிடித்தத் திரைப்படங்களில் ஒன்று இது.எனக்குப்பிடித்த வரிகள்,
'இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா?'

'உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்'

-------------------------------------------
படம் : சலங்கை ஒலி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------------
தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
(தகிட)
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா?
(இருதயம்)
சுதியும் லயமும் ஒன்று சேர
(தகிட)
உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்
(உலக)
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
(மனிதன்)
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
(தகிட)
பழைய ராகம் மறந்து,
நீ பறந்ததென்ன பிரிந்து?
இரவுதோறும் அழுது,
என் இரண்டு கண்ணும் பழுது
(பழைய)
இது ஒரு ரகசிய நாடகமே!
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே!
பாவம் உண்டு! பாவம் இல்லை!
வாழ்க்கையோடு கோபமில்லை!
காதல் என்னைக் காதலிக்கவில்லை...!
ஆ....ஆ....ஆ...!
(தகிட)

0 Comments:

Post a Comment

<< Home