Friday, November 23, 2007

135. ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே!

இப்போதெல்லாம் ஊடகங்களில் கேட்க முடியாத பல பாடல்களில் இதுவும் ஒன்று. என்ன ஒரு லாவகமான மெட்டு! வாலியின் வரிகளில், ஜேசுதாஸின் குரலில் இன்னும் மெருகேறியிருக்கிறது பாடல். 'தந்தையும் தாயும்' எனத் தொடங்கி 'மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட' எனும் வரையிலான மெட்டை நான் மிகவும் ரசித்தேன்.
------------------------------------------
படம் : வருஷம் 16
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஓ!....ஓ!
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
(நான்)
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நான் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நான் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே!
(பழமுதிர்)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே?
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை - என்றும்
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போலெங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்)

1 Comments:

Blogger Bee'morgan சொல்கிறார்.....

சேரா, This song is one of my All time favourite. :-) பாடலைக் கேட்கும் போதே ஏற்படும் அந்த பரவசம் விவரிக்க முடியாதது.குறிப்பாக சரணம் முடிந்து மீண்டும் தொடங்கும் போது, முற்றிலும் வேறுபட்ட இரண்டு மெட்டுகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் அந்த Transition எனக்கு ரொம்ப பிடிக்கும்..

November 25, 2007 8:52 PM  

Post a Comment

<< Home