Wednesday, November 26, 2008

136. இருளிலும் படித்திடும் வர்ணக்கவிதை - காதல்!

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல். சின்னத்திரை முலமாக நமக்கு மிகவும் அறிமுகமான ஜேம்ஸ் வசந்தனின் இன்னொரு முகத்தை நாம் அறியச்செய்த திரைப்படம் இது, குறிப்பாக இப்பாடல். இந்தப் பாடல் முழுவதும் வியாபித்திருப்பவர் அவர்தான். பாடல் காட்சிகள் மனத்திலேயே நிற்கின்றன. முதல் திரைப்படத்தை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தந்த இயக்குநர் சசிகுமாரின் தைரியத்தைப் பாராட்டலாம். எனக்குப் பிடித்த வரிகள்,
'இரு
கண்கள் எழுதும் ஒரு
வர்ணக்கவிதை காதல் தானா? ஒரு
வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை
இருளிலும் படித்திட முடிகிறதே!'
'உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்'

----------------------------------
படம் : சுப்ரமணியபுரம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
வரிகள் : ?
குரல் : பெல்லி ராஜ், தீபா மரியம்

----------------------------------

ஆ:
கண்கள் இரண்டால் உன்
கண்கள் இரண்டால் என்னைக்
கட்டி இழுத்தாய் இழுத்தாய் - போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு
கள்ளச் சிரிப்பில் என்னைத்
தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

(கண்கள்)

பெ:
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதுமென நான் நினைத்தே நகர்வேன்
ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு
வர்ணக்கவிதை காதல் தானா? ஒரு
வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை
இருளிலும் படித்திட முடிகிறதே!

ஆ:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?
பெ:
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே!
மறுபுறம் நாணமும் தடுக்குதே!
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
(கண்கள்)

பெ:
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ:
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர

ஆ:
கண்கள் இரண்டால் உன்
கண்கள் இரண்டால் என்னைக்
கட்டி இழுத்தாய் இழுத்தாய் - போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு
கள்ளச் சிரிப்பில் என்னைத்
தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பெ:
கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு
வர்ணக்கவிதை காதல் தானா? ஒரு
வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை
இருளிலும் படித்திட முடிகிறதே!
ஆ:
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதுமென நான் நினைத்தே நகர்வேன்
ஏமாற்றி
பெ:
கண்கள் இரண்டால் உன்
கண்கள் இரண்டால் என்னைக்
கட்டி இழுத்தாய் இழுத்தாய் - போதாதென
ஆ:
சின்னச் சிரிப்பில் ஒரு
கள்ளச் சிரிப்பில் என்னைத்
தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்