Monday, March 27, 2006

63. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்!

பாடல் வேறு, கவிதை வேறு என்ற இலக்கணத்தை மாற்றியவர்களில் முக்கியமானவர் வைரமுத்து. இப்பாடல் வரிகளைக் கேட்கும்போதும் இதை உணர முடியும். இளையராஜாவின் இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் இது...!
----------------------------------------------------
படம் : நினைவுள்ளவரை நித்யா
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------
ஆ:
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்!
பொன்மேகம் நம் பந்தல்!
உன் கூந்தல் என் ஊஞ்சல்!
உன் வார்த்தை சங்கீதங்கள்..ஆ..!
(ரோஜாவை)
ஆ:
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை!
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை!
பெ:
மௌனமே சம்மதம் என்று,
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ...!
(ரோஜாவை)
பெ:
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்1 இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்!
ஆ:
பூவிலே மெத்தைகள் தைப்பேன்!
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்!
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஓ...!
(ரோஜாவை)

62.கல்லைக் கலையாக்கும் வித்தை கற்றவள்...காதலி!

ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசையும் பாடல் வரிகளும் அருமை. சிறிய இடைவெளிக்குப் பிறகு பாடியிருக்கிறார் உன்னி கிருஷ்ணன்.
-----------------------------------------------------
படம் : உள்ளம் கேட்குமே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & ஹரிணி
-----------------------------------------------------
கு:
யார் வந்தது? யார் வந்தது?
உன் நெஞ்சிலே யார் வந்தது?
போர் வந்தது போர் வந்தது,
உள் நெஞ்சிலே போர் வந்தது!
பூ வந்தது, பூ வந்தது,
கை வீசிடும் பூ வந்தது!
தீ வந்தது, தீ வந்தது,
பூக்கண்களில் தீ வந்தது!
ஏன் வந்தது? ஏன் வந்தது?
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்!
பெண் வந்ததும், பெண் வந்ததும்,
உன் சூழலில் சத்தம் சத்தம்!
ஆ:
மழை மழை, என் உலகத்தில் வருகின்ற முதல் மழை!
நீ முதல் மழை!
அலை அலை, என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை!
நீ முதல் அலை!
என்ன திண்மை! என்ன வன்மை!
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்!
போகப் போக புரிகின்ற போர்க்களம்!
ஒன்று செய், இப்போதே உள் நெஞ்சை உடையச் செய்!
(மழை)
ஆ:
நீ மட்டும் ம் என்றால் உடலோடு உடல் மாற்றச் செய்வேனே!
பெ:
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டுச் செல்வேனே!
ஆ:
அடி பருவப் பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே..!
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே...!
பெ:
பூவின் உள்ளே ஒரு தாகம், உன் உதடுகள் தா!
(யார்)
(மழை)
பெ:
தீண்டாமல் சருகாவேன், நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்!
ஆ:
ஐயோடீ நான் கல்லாவேன், உளியாக நீ வந்தால் கலையாவேன்!
பெ:
ஏ நீயும் ஓடி வந்து என்னைத் தீண்டத் தீண்ட பாரு..!
ஒரு பாதரசம் போல நான் நழுவிச் செல்வேன் தேடு...!
ஆ:
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில்.... ஏன் ..?
(மழை)

61.நாட்டுக்குப் பூட்டு போடு! காட்டுக்குள் ஓடியாடு!

மறத்துப் போன மனித வாழ்க்கையை விட்டு காட்டு வாழ்க்கை வாழத்துடிக்கும் கவிஞனின் எண்ண ஓட்டம்...! நரம்புகளையும் துடிக்கச் செய்யும் ரஹ்மானின் இசை...! உன்னி கிருஷ்ணன், சித்ராவின் குரல் எல்லாமே இந்தப் பாடலை அழகுபடுத்துகின்றன.
-----------------------------------------------------------
படம் : என் சுவாசக்காற்றே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & சித்ரா
-----------------------------------------------------------
ஆ:
திறக்காத காட்டுக்குள்ளே,
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்!
பறந்தோடும் மானைப் போலத்
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்!
பெ:
பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி,
வட்டம் போடும் பட்டாம்பூச்சி,
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு...!
ஓடியோடி ஆலம் விழுதில்
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு..!
ஆ:
அந்த வானம் பக்கம், இந்த பூமி சொர்க்கம்,
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்!
நெஞ்சில் ஏக்கம் வந்தால், கண்ணில் தூக்கம் வந்தால்,
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்!
(திறக்காத)
பெ:
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ?
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ?
அது தன்னைச் சொல்லுதோ? இல்லை உன்னைச் சொல்லுதோ?
அட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது,
அதோ அதோ அதோ அங்கே,
ஐயையோ! வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ?
அவை வண்ணச் சிறகுகளோ? வானவில் பறக்கின்றதோ?
ஆ:
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது!
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது!
மேகம்போல் காட்டை நேசி!
மீண்டும் நாம் ஆதிவாசி!
உன் கண்கள் மூடும்
காதல் காதல் காதல் காதல் காதல் யோசி!
(திறக்காத)
பெ:
கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு!
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு!
அட, என்ன நினைப்பு? அதைச் சொல்லியனுப்பு!
என் காலடியில் சில வீடுகள் நகருது,
இதோ இதோ இதோ இதோ இங்கே...
ஆகாகா வேடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ?
அவை நத்தைக் கூடுகளோ? வீடுகள் இடம் மாறுமோ?
ஆ:
புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது!
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது!
நாட்டுக்குப் பூட்டு போடு!
காட்டுக்குள் ஓடியாடு!
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு!
(திறக்காத)

60. ஓர் ஓவியனும், ஓர் ஒவியமும்

கவிதை இல்லாமல் காதலோ, காதல் இல்லாமல் கவிதையோ இல்லை என்று அடிக்கடி நினைக்க வைத்துவிடுவார் வைரமுத்து. இந்தப் பாடலைக் கேட்கும்போதும் அதே எண்ணம் வருவதுண்டு! வித்யாசாகரின் மென்மையான இசை லேசாக இதயத்தை வருடிச் செல்கிறது. இந்த விஜய்பிரகாஷ் யார் என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இருவருக்குமே இனிமையான குரல் வளம்!
என்னைக் கவர்ந்த வரிகள்.... எல்லா வரிகளுமே! குறிப்பாக,
"மேகத்தை ஏமாற்றி,
மண் சேரும் மழை போலே,
மடியோடு விழுந்தாயே வா!"
----------------------------------------------------------------
படம் : அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : விஜய்பிரகாஷ் & சாதனா சர்கம்
----------------------------------------------------------------
ஆ:
பூ வாசம் புறப்படும் பெண்ணே! நான் பூ வரைந்தால்...
தீ வந்து விரல் சுடும் கண்ணே! நான் தீ வரைந்தால்....
பெ:
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்,
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
ஆ:
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....!
(பூ வாசம்)
ஆ:
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்!
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்!
பெ:
கோடு கூட ஓவியத்தின் பாகமே!
ஊடல் கூட காதல் என்று ஆகுமே!
ஆ:
ஒரு வானம் வரைய நீல வண்ணம்!
நம் காதல் வரைய என்ன வண்ணம்?
பெ:
என் வெட்கத்தின் நிறம் தொட்டு,
விரல் என்னும் கோல் கொண்டு,
நம் காதல் வரைவோமே வா!
(பூ வாசம்)
பெ:
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
ஆ:
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது!
பெ:
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆ:
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது!
பெ:
நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்!
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்!
ஆ:
மேகத்தை ஏமாற்றி,
மண் சேரும் மழை போலே,
மடியோடு விழுந்தாயே வா!
(பூ வாசம்)

Sunday, March 26, 2006

59. மின்னலே!என் வானம் உன்னைத் தேடுதே!

இசையும், வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் அருமை!எனக்குப் பிடித்த வரிகள்,
"பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா? - ஒரு

பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா? - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?"
-----------------------------------------------
படம் : மே மாதம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------
மின்னலே நீ வந்ததேனடி? - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி?
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி?
சில நாழிகை நீ வந்து போனது!
என் மாளிகை அது வெந்து போனது!
மின்னலே!என் வானம் உன்னைத் தேடுதே!
(மின்னலே)
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே! - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே!
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே! - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே!
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்!
(மின்னலே)
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா? - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா? - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்!
(மின்னலே)

58. கானல் நீரால் தீராத தாகம், கங்கை நீரால் தீர்ந்ததடி!

S.P.Bயின் அற்புதமான குரலில் இளையராஜாவின் கேட்கக் கேட்கத் திகட்டாத இசையில் என்னை மயங்க வைக்கும் இன்னொரு பாடல்...இது! வாலியின் வரிகள் கதைக்கேற்றவாறு அமைந்திருக்கின்றன.
-----------------------------------------------
படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------
கேளடி கண்மணி! பாடகன் சங்கதி!
நீ இதைக் கேட்பதால், நெஞ்சிலோர் நிம்மதி!
ஆ!
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்,
ஓர் கதையை உனக்கென நான் கூற....!
(கேளடி)
எந்நாளும் தானே தேன் விருந்தாவது,
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்!
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா,
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்!
கானல் நீரால் தீராத தாகம்,
கங்கை நீரால் தீர்ந்ததடி!
கால் போன பாதைகள் நான் போன போது,
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது!
(கேளடி)
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்!
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா?
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்!
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா?
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்,
உன்னால் தானே உண்டானது!
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை!
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை!
(கேளடி)

57.வானம் பார்த்த பூமியாக வாழும் காதலன்...!

A.M.ராஜா மிகச் சிறந்த பாடகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் இது போன்ற அமரத்துவம் வாய்ந்த பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். இவர் முதலில் இசை அமைத்த படம் " கல்யாணப் பரிசு". இவரின் மனைவி ஜிக்கியும் பிரபலமான ஒரு பாடகியாகத் திகழ்ந்தவர். ஸ்ரீதர் இந்தப் படத்தின் இயக்குனர். காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலின் காட்சியமைப்பும் அருமை (முழுப்படமுமே காஷ்மீரில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது). இந்தப் பாடல் என் விருப்பப் பாடல்களில் மிக முக்கியமான ஒன்று.
------------------------------------------------------------
படம் : தேன்நிலவு
இசை : A.M.ராஜா
வரிகள் : கண்ணதாசன்
குரல் : A.M.ராஜா
------------------------------------------------------------
பாட்டு பாடவா? பார்த்து பேசவா?
பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா?
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா?
(பாட்டு)
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே,
மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே!
(மேக வண்ணம்)
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா?
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா?
(பக்கமாக)
மாலை அல்லவா? நல்ல நேரமல்லவா?
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா?
(பாட்டு)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,
நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே!
(அங்கமெல்லாம்)
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா?
இந்த காதலிக்கு தேன்நிலவில் ஆசை இல்லையா?
(கண்ணிறைந்த)
காதல் தோன்றுமா? இன்னும் காலம் போகுமா?
இல்லை காத்துக் காத்து நின்றது தான் மீதமாகுமா?
(பாட்டு)

Wednesday, March 22, 2006

56.ஊரெல்லாம் ஒரே காதல்!

ஊர்களை வைத்துத் தோரணம் கட்டி காதலிக்கு மாலையாக்கி இருக்கிறார் கவிஞர். சேரனுக்கே உரித்தான மண்ணின் மணம் கமழ்கிறது இந்தப் படத்திலும், இந்தப் பாடலிலும்!
----------------------------------------------------------
படம் : பொற்காலம்
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
குரல் : கிருஷ்ணராஜ்
----------------------------------------------------------
தஞ்சாவூரு மண்ணு எடுத்து,
தாமிரபரணித் தண்ணிய விட்டு...
(தஞ்சாவூரு)
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை!
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை!
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா...!
(எத்தனையோ)
அது அத்தனையும் உன்னப்போல மின்னுமா?
பதில் சொல்லம்மா!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே! தந்தானே! என்னோட மயிலே!
(தஞ்சாவூரு)
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு!
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு!
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க!
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க!
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க!
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க!
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க!
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க!
(தந்தானே)
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு!
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு!
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு!
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு!
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு!
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு!
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு!
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு!
(தந்தானே)
(தஞ்சாவூரு)

55.முகவரி தேடும் ஒரு நாடோடிப் பாடல்.

வைரமுத்துவின் வைரவரிகளுக்கு தனி விளக்கம் தேவையே இல்லை. இசையும் அற்புதம். சின்னக்குயில் சித்ராவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது..!
------------------------------------
படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : சித்ரா
------------------------------------
நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை!
உள்ள சோகம் தெரியவில்லை!
தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை!
அதச் சொல்லத்தெரியவில்லை!
(நானொரு சிந்து)
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ!
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ!
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு,
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு?
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு!
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு!
கண்டுபிடி!

(நானொரு சிந்து)
பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை!
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை!
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே,
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே!
தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன?
சொல்லுங்களேன்...!
(நானொரு சிந்து)

Tuesday, March 21, 2006

54. ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!

சமீபத்தில் வெளியாகி இருக்கும் பாடல் இது. ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கும் A.R.ரஹ்மான், இந்தப் படத்தின் பாடல்களை நன்றாகவே கொடுத்திருக்கிறார். வைரமுத்து, தன் "கொஞ்சம் தேநீர், நிறைய வானம்" கவிதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையின் வரிகளை இந்தப் பாடலில், இடையிடையே பயன்படுத்தி இருக்கிறார். நல்ல மென்மையான பாடல்.
-------------------------------------------
படம் : GOD FATHER
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
-------------------------------------------
தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?
(தீயில்)
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!
(ஓர்)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!
(தீயில்)

Monday, March 20, 2006

53. தீயோடு போகும் வரையில்...தீராது இந்தத் தனிமை!

செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, முத்துக்குமார் கூட்டணியில் இசையில் பரபரப்பாகக் கலக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் இது! வழக்கம் போல இசை பிரமாதம்! வரிகளில் அனுபவ முதிர்ச்சி காட்டுகிறார் முத்துக்குமார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது!
---------------------------------------------
படம் : புதுப்பேட்டை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : யுவன் ஷங்கர் ராஜா
---------------------------------------------
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப் போகாது!
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது!
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்?
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்!
ஓ!கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு,
ஓ!ஒரு வாசல் தேடியே விளையாட்டு,
ஓ!கண் திறந்து பார்த்தால் பல கூத்து,
ஓ!கண் மூடிக் கொண்டால்....!
ஓஹோஹோ!

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்,
வந்தவை போனவை வருத்தமில்லை!
காட்டினிலே வாழ்கின்றோம்,
முட்களில் வலியுண்டு மரணமில்லை!
இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்!
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே,
உனக்குத் துணை என்று விளங்கிவிடும்!
தீயோடு போகும் வரையில்...
தீராது இந்தத் தனிமை!
கரை வரும் நேரம் பார்த்து,
கப்பலில் காத்திருப்போம்!
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்த்தொடுப்போம்!
ஓ!அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே,
ஓ!இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே,
ஓ!மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே,
ஓ!அந்தக் கடவுளைக் கண்டால்...!
ஓஹோஹோ!

அது எனக்கு, இது உனக்கு,

இதயங்கள் போடும் தனிக்கணக்கு!
அவள் எனக்கு, இவள் உனக்கு,
உடல்களும் போடும் புதிர்க் கணக்கு!
உனக்குமில்லை, இது எனக்குமில்லை,
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்!
நல்லவன்தான், அட கெட்டவன்தான்,
கடைசியில் அவனே முடிவு செய்வான்!
பழி போடும் உலகம் இங்கே!
பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று,
அத்தனையும் பார்த்திருப்போம்!
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்!
ஓ!பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக் கொள்வோம்,
ஓ!பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓ!கதை முடியும்போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓ!மறு பிறவி வேண்டுமா?

Wednesday, March 08, 2006

52.கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து,

வரிகளுக்கு மெட்டு அமைக்கப் பெற்ற பாடல் இது! 20 நிமிடங்களில் இந்தப் பாடலுக்கு மெட்டமைத்தாராம் வித்யாசாகர்! கவிஞரின் கவித்திறன் வயது ஏற ஏற அதிகமாகிக்கொண்டேதான் போகிறது...!
----------------------------------------------------
படம் : இயற்கை
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : திப்பு & குழு

----------------------------------------------------
கு:
Babe! Tell me you love me, I hope I hear it, when I'm in love.....
தி:
காதல் வந்தால் சொல்லி அனுப்பு!
உயிரோடிருந்தால் வருகிறேன்!
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய,
கரையில் கரைந்து கிடக்கிறேன்!
சுட்ட மண்ணிலே மீனாக,
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி!
(சுட்ட)
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து,
கடல் நீர் மட்டும் கூடுதடி!
(காதல் வந்தால்)
தி:
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு,
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு!
கு:
Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!
தி:
சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு,
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு!
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை!
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை!
கடல் துயில் கொள்வதும், நிலா குணம் கொள்வதும்,
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி!
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி.. கொல்லுதடி!

(காதல் வந்தால்...)
தி:
பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்,
உன்னைக் காணும் முன்பு,
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்,
உன்னைக் கண்ட பின்பு!
அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு,
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு!
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை...!
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை..!
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்,
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி...!
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி... கொல்லுதடி!
(காதல் வந்தால்...)

51. தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்!

தமிழில் சில திரைப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் மரகதமணியின் அற்புதமான இசையை இந்தப் பாடலிலேயே கண்டுகொள்ளலாம். புலமைப்பித்தனின் வரிகள்,

"தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்"

என்னும் புரட்சிக் கவிஞரின் பாடலை நினைவுபடுத்துகின்றன
------------------------------------------------------
படம் : அழகன்
இசை : மரகதமணி
வரிகள் : புலமைப்பித்தன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------
சாதி மல்லிப் பூச்சரமே! சங்கத் தமிழ்ப் பாச்சரமே!
ஆசையென்ன ஆசையடி? அவ்வளவு ஆசையடி!
எங்கெங்கே முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ!
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்!
கண்ணித் தமிழ்த் தொண்டாற்று, அதை முன்னேற்று,
பின்பு கட்டிலில் தாலாட்டு!
(சாதி மல்லிப்)
எனது வீடு, எனது வாழ்வு, என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்!
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்!
கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது!
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்!
கேட்டுக்கோ ராசாத்தி! தமிழ் நாடாச்சு!
இந்த நாட்டுக்கு நாமாச்சு!
(சாதி மல்லிப்)
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்!உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்!
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி!
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி!
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா?
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்...!
உன்னைப் போல் எல்லோரும், அட இந்நேரம்,
இந்த இன்பத்தில் தேனூறும்!
(சாதி மல்லிப்)

Sunday, March 05, 2006

50. காதலுக்கும் நிறமுண்டு!

பொன்மணி வைரமுத்து, ஒரு ரசிகையாக வைரமுத்துவுக்கு எழுதிய விமர்சனக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார், "வார்த்தைகளை வானவில்லாக்கி வர்ணஜாலம் காட்ட நான் ஒன்றும் வைரமுத்து இல்லை. வெறும் உணர்ச்சிகளை மட்டுமே சொல்லத் தெரிந்த வாசகி!" என்று....
இந்தப் பாட்டில் வானவில்லையே வார்த்தைகளாக்கி கவிதை ஜாலம் காட்டிவிட்டார் கவிஞர்!
இசையும், குரலும் இந்தப் பாடலின் உயிர்த்துடிப்புகள்!
வரிகளில் வரும் நிறங்களை, கண் முழுவதும் நிறைய வைத்த P.C.ஸ்ரீராமும் பாராட்டப்பட வேண்டியவர்.
------------------------------------------------------
படம் : அலைபாயுதே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & கிளிண்டன்
------------------------------------------------------
கி:
சகியே! ஸ்நேகிதியே! காதலில் காதலில் காதலில் நிறமுண்டு!
சகியே! ஸ்நேகிதியே! என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு!
ஹ:
பச்சை நிறமே! பச்சை நிறமே! இச்சை மூட்டும் பச்சை நிறமே!
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே! எனக்கு சம்மதம் தருமே!
பச்சை நிறமே! பச்சை நிறமே! இலையின் இளமை பச்சை நிறமே!
உந்தன் நரம்பும் பச்சை நிறமே! எனக்கு சம்மதம் தருமே!
எனக்கு சம்மதம் தருமே..! எனக்கு சம்மதம் தருமே!
(சகியே!)
கிளையில் காணும் கிளியின் மூக்கு,
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு,
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா,
பூமி தொடா பிள்ளையின் பாதம்!
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்!
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்!

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்,
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்,
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்,
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்,
மஞ்சள்.. மஞ்சள்... மஞ்சள்...!
மாலை நிலவின் மரகத மஞ்சள்!
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்!
(சகியே!)
அலையில்லாத ஆழி வண்ணம்,
முகிலில்லாத வானின் வண்ணம்,
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்,
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்,
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்,
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்!
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்!

இரவின் நிறமே! இரவின் நிறமே!
கார்காலத்தின் மொத்த நிறமே!
காக்கைச் சிறகில் காணும் நிறமே!
பெண்மை எழுதும் கண்மை நிறமே!
வெயிலில் பாடும் குயிலின் நிறமே!
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே!
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே!
(சகியே!)
வெள்ளை நிறமே! வெள்ளை நிறமே!

மழையின் துளியும் தும்பை நிறமே!

வெள்ளை நிறமே! வெள்ளை நிறமே!
விழியில் பாதி உள்ள நிறமே!
மழையின் துளியும் தும்பை நிறமே!
உனது மனசின் நிறமே!
உனது மனசின் நிறமே...! உனது மனசின் நிறமே!

49. சிறகு முளைத்தத் தீயானேன்!

அறிவுமதியின் அற்புதமான வரிகள் இந்தப் பாடலுக்கு அழகூட்டுகின்றன. வித்யாசாகரின் இசையும், மதுபாலகிருஷ்ணாவின் குரலும் பாடலை மேலும் சிறப்புறச் செய்கின்றன. எல்லாம் இருந்தும், இந்தப் பாடல் இடம்பெற்றத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, எல்லாத் திறமையும் வீணாகிவிட்டதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. ஆனாலும், பிரபலமாகாத, எனக்குப் பிடித்த, இந்தப் பாடலைப் பதிப்பிப்பதில் எனக்குச் சந்தோஷமே! இனி திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில்லை என்று அறிவித்துவிட்ட அறிவுமதியின் கோபம் இயல்பானதே! இருந்தாலும் என் போன்ற ரசிகர்களுக்கு அது மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
-------------------------------------------------
படம் : சுள்ளான்
இசை : வித்யாசாகர்
வரிகள் : அறிவுமதி
குரல் : மதுபாலகிருஷ்ணா
-------------------------------------------------
சிறகு முளைத்தத் தீயானேன்!
நான் திசைகள் உடைத்தக் காற்றானேன்!
ஊழி நெருப்பில் கருவானேன்!
நான் உன்னை அழிக்க உருவானேன்!
கொடுமைகள் கண்டு பொறுப்பேனா?
நான் குத்துக் கல்லாய் இருப்பேனா?
அக்னி குஞ்சை அடைக் காத்தேன்!
அட இக்கணம் உன்னை குடை சாய்ப்பேன்!
கூற்றக் கழுவினில் ஏற்றும் துணிவினில்
சீற்றப் புயலென வருவேன்டா!
மூர்க்கப் பயலுனை தீர்க்கும் வரையினில்,
தூக்கம் என்பதை மறப்பேன்டா!
அடங்கா வெறியுடன் அடி நாள் பசியுடன்,
கயவா உனதுயிர் பிழிவேன்டா!
இரண்டாய் உனதுடல் பிளந்தே
நெருப்பினில் மிளகாய் கருகிட எறிவேன்டா!
குருதி அருவி என பெருகி பெருகி வர,
இறுதி இறுதி என மரணம் திமிறி வர,
திருகி திருகி தலை சிதறி தரையில் விழ,
தருவி தருவி மனம் குமுறி குமுறி எழ,
ஆணவங்கள் சாய்ந்திருக்க
ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க
சூரனுக்கு வேல் எடுத்த
வேலனுக்கு சேவல் என்று சிரிப்பேன்டா!

Wednesday, March 01, 2006

48. இளங்காற்று இசை போலப் பேசுகிறது!

"இளையராஜா இளையராஜா தான்!" என்று சொல்ல வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று....! சிறந்த பாடல் வரிகள்! நன்றாகப் படமாக்கிய "பாலசுப்ரமணியெம்" கு ஒரு ஷொட்டு! எனக்குப் பிடித்த வரிகள்....
"கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!"

"தாலாட்டு கேட்டிடாமலே,தாயின் மடியைத்தேடி
ஓடும் மலைநதி போல!"
-----------------------------------------------------------
படம் : பிதாமகன்
இசை : இளையராஜா
வரிகள் : பழனிபாரதி
குரல் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
-----------------------------------------------------------
இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!
கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!
(இளங்காத்து)
பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு!
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்,
அன்னை மடி இந்த நிலம் போல,
சிலருக்கு தான் மனசு இருக்கு!
உலகமதில் நிலச்சு இருக்கு!
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல!
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல!
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல!
(இளங்காத்து)
ஓ...! மனசுல என்ன ஆகாயம்?
தினந்தினம் அது புதிர் போடும்,
ரகசியத்த யாரு அறிஞ்சா?
அதிசயத்த யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே,
மலர் பறிக்குது தினம்தோறும்!
மலர் தொடுக்க நாரை எடுத்து,
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்,
மூடும் சிறகில மெல்ல பேசும் கதை எல்லாம்!
தாலாட்டு கேட்டிடாமலே,
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல!
(கரும்பாறை)