Thursday, July 13, 2006

104. பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?

மூச்சு விடாமல் சரணத்தைப் பாடியிருப்பார் S.P.B. நல்ல முயற்சி. இளையராஜவின் இசை சுகானுபவம்.
------------------------------------------------------------
படம் : கேளடி கண்மணி
இசை : இளையராஜா
வரிகள் : பாவலர் வரதராசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!
(மண்ணில்)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்? பெண்மயில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்,
சிந்திவரும் குங்குமமுதம் தந்திடும் குமுதமும்,
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்!
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்!
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி!
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?
(மண்ணில்)

Monday, July 10, 2006

103. முள்ளோடுதான் முத்தங்களா? சொல்! சொல்!

என்ன ஒரு காதல்...? என்ன ஒரு கவிதை? வைரமுத்து வைரமுத்துதான். தன் முதல் படியிலேயே எல்லோரின் இதயக்கதவுகளையும் தட்டி வைக்கிறார் A.R.ரஹ்மான். ஒளி, ஒலி இரண்டுமே அருமை!
----------------------------------------------------
படம் : ரோஜா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & சுஜாதா
----------------------------------------------------
ஆ:
காதல் ரோஜாவே! எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணில்!
கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்,
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்!
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
(காதல்)
பெ:
ல...லா...லா..லா....
ஆ:
தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலை தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்த்ததில்
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் ரெண்டு சேர்வதில்
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா? சொல்!சொல்!
(காதல்)
பெ:
ல...லா...லா..லா....
ஆ:
வீசுகின்ற தென்றலே
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ!
பூவளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ!
பாவை இல்லை பாவை,
தேவை என்ன தேவை!
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா? சொல்! சொல்!
(காதல்)

Sunday, July 09, 2006

102. ஆறு மனமே ஆறு

1964 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது. அந்த நாட்களிலேயே காதல், காமம், கடவுள் என்று பல விஷயங்களை ஆராயும் இந்தப் படத்தை எடுத்த இயக்குனரையும், படக்குழுவினரையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். கண்ணதாசனின் வரிகள், தத்துவத்தின் உச்சம்! இசையும் அருமை! T.M.S. ன் குரலும் இனிமை!
----------------------------------------------------
படம் : ஆண்டவன் கட்டளை
இசை : M.S.விஸ்வநாதன் - ராம்முர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : T.M. செளந்தரராஜன்
----------------------------------------------------
ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு,
தெய்வத்தின் கட்டளை ஆறு, தெய்வத்தின் கட்டனை ஆறு...!
(ஆறு மனமே)
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி...!
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்!
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!
இந்த இரண்டு கட்டளை அந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
எல்லா நன்மையும் உண்டாகும்!
(ஆறு மனமே)
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்!
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
உண்மை என்பது அன்பாகும்
பெரும்பணிவு என்பது பண்பாகும்!
இந்தநான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
எல்லா நன்மையும் உண்டாகும்!
(ஆறு மனமே)
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்...!
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்...!
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்!
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்!
(ஆறு மனமே)

101. வானம் வசமாகும்!

பா.விஜய்க்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல். சமூக அக்கறையுள்ள இயக்குனர் சேரனின் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். யாருக்குமே தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய ஒரு பாடல்.
------------------------------------------------
படம் : ஆட்டோகிராப்
இசை : பரத்வாஜ்
வரிகள் : பா.விஜய்
குரல் : சித்ரா & ********
------------------------------------------------
பெ:
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே!
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்!
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்...!
மனமே! ஓ மனமே! நீ மாறிவிடு!
மலையோ? அது பனியோ? நீ மோதிவிடு!
(ஒவ்வொரு)
பெ:
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது.
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்,
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்.
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்.
யாருக்கில்லை போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால்,
ஒரு நாளில் நிஜமாகும்!
(மனமே)
(ஒவ்வொரு)
பெ:
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம், வானமளவு யோசிப்போம்,
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்.
லட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு!
ஆ:
மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்!
அவமானம், படுதோல்வி எல்லாமே உரமாகும்!
பெ:
தோல்வியின்றி வரலாறா? துக்கமென்ன என் தோழா?
ஒரு முடிவிருந்தால், அதில் தெளிவிருந்தால்,
அந்த வானம் வசமாகும்!
(மனமே)
(ஒவ்வொரு)

Saturday, July 08, 2006

100. ஓர் அழகான தமிழ் மழை!

இந்தப் பாடலை ஒருமுறை மட்டுமே கேட்டிருக்கிறேன். இப்பாடல்தான் என் வலைப்பூவின் 100 வது பாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பியதோடு, இதன் வரிகளையும் அனுப்பிய நண்பன் சுரேஷிற்காக இந்தப் பாடல். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் எனத் தெரியவில்லை.
----------------------------------------------------
படம் : ஜூன் R
இசை : சரத்
வரிகள் :
குரல் : ஹரிஹரன்
----------------------------------------------------
மழையே மழையே
நீரின் திரையே
வானம் தெளிக்கும்
கவிதைத் துளியே


மேகத்தின் சிறு பொறியே
நீல வானமே

ஒரு தறியில்லாமல் நீரின் நூலில் மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே இயற்கை அழகே


ரிம் ஜிம்

(மழையே)

பூமி தேகமே அதில் விழும் மழை துளி இந்த உலகின் ஜீவன் ஆகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்

வறண்ட பாலைகளே
ஆகும் சோலைகளே
வானம் அன்னதானம் இந்த மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையேயயயயய...


(மழையே)

ஆறைத் தாண்டியே உடல் மனம் உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே மழை தொடும்
மண்ணுக்குள் வாசம் தோன்றும்

நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேன் நானே

ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்


(மழையே)

Friday, July 07, 2006

99. ரண்டக்க ரண்டக்க ரண்டக்க!

மிகப் பிரபலமான பாடல். கிராமிய மணத்தோடான வரிகளின் மூலம் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் வைரமுத்து. ஹாரிஸ் ஜெயராஜின் இசை காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது. புதுப்பாடகி சைந்தவி நன்றாகவே பாடி இருக்கிறார். பாடலின் ஒவ்வொரு கணத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் கலை இயக்குனரையும், ஷங்கரையும் பாராட்டலாம். குறிப்பாக, புடவை போல அமைக்கப்பட்ட சாலை, முண்டாசு கட்டிய வாகனங்கள், முகங்களோடு கூடிய பாறைகள் இவற்றைச்சொல்லலாம். எனக்குப் பிடித்த வரிகள்,
"இசக்கிக் கடை பிசிறு முட்டாயே!"
"டெண்டு கொட்டாய் இன்டர்வெல் முறுக்கே!"
"சுட்டப் பால் போல தேகம் தான்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு!"

------------------------------------------------
படம் : அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : கே.கே, சைந்தவி & ஜாஸி கிப்ட்
------------------------------------------------
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஆ:
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலம்மா
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலம்மா

ஆ:
அண்டங்காக்கா கொண்டைக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க...
ஆ:
அச்சு வெல்லத் தொண்டைக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க...
ஆ:
ஐ ஆர் 8 பல்லுக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க...
ஆ:
அயிரை மீனு கண்ணுக்காரி!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டாக்க டங்குடக்கா...
ஆ:
பூவாலொரு போடு போட்டா சைவக்காட்டு வேட்டைக்காரி!
பெ:
காதல் பச்சோந்தி, ராவில் பூச்சாண்டி
பச்சத்தண்ணிய ஒத்தப்பார்வையில் பத்த வச்சாண்டி!
ஆ:
ஏ! தண்ணிக்குடி தாண்டி,உன் தாவணி தொட்டேன்டி!
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டி!
(அண்டங்காக்கா)
பெ:
ஏ! சீ.. வா, என்று ஏவல் செய்வாயோ?
ஆ! ஹூம்.. ஹே, என்று கூவச்செய்வாயோ?
ஆ:
இஞ்சி மரப்பா இடுப்பப் பாத்து கசங்கிப் போனேன்டி!
ஈர உதட்டுல சூடு பரப்பி இஸ்திரி போடேன்டி!
பெ:
ஜாங்கு ஜக்க ஜாலக்காரா!
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
பப்பரப்ப பாடிக்காரா!
ஆ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பெ:
உன்னைத்தேக்கடியில் யானை போல நெனைச்சேன்!
உன்னைத்தேக்கடியில் யானை போல நெனைச்சேன்!
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்!
(அண்டங்காக்கா)
ஆ:
மா பலா வாழை முக்கனி நீயோ?
சா பூ த்ரீ போட்டு சாப்பிடுவேனோ?
பெ:
பழந்தின்னி வவ்வா பல்லு படாம கவ்விக்கொள்வாயா?
ரெட்டை வாழைப்பழத்தப் போல ஒட்டிக்கொள்வாயா?
ஆ:
இசக்கிக் கடை பிசிறு முட்டாயே!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
டெண்டு கொட்டாய் இன்டர்வெல் முறுக்கே!
பெ:
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஆ:
சுட்டப் பால் போல தேகம் தான்டி உனக்கு
சுட்டப் பால் போல தேகம் தான்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு!
(அண்டங்காக்கா)

98. ஊர்வலம் போகிறாள், காதல் தேவதை!

இந்த அற்புதமான காதல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை. நல்ல மென்மையான இசை! ரசிக்கத்தகுந்த பாடல்.
-----------------------------------------------------
படம் : ஈரமான ரோஜாவே
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : மனோ
-----------------------------------------------------
அதோ மேக ஊர்வலம்,
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!
(அதோ)
உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!
(அதோ)
குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!
தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!
பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!
காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?
(அதோ)

97. கண்ணீரே! கண்ணீரே!

மணிரத்னத்தின் அழகான காட்சியமைப்பு இப்பாடலின் மிகப்பெரிய பலம். மொழி மாற்றம் செய்யப்பட்ட படமாக இருந்தாலும் மிக அற்புதமான வரிகளை வழங்கியிருக்கிறார் வைரமுத்து. இசையும் அருமை! சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மனதிலேயே நிற்கிறது.
----------------------------------------------------
படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான், அனுராதா & பெபி
----------------------------------------------------
இரு பூக்கள் கிளை மேலே!
ஒரு புயலோ அலை மேலே!
உயிர் ஆடும் திகிலாலே,
என் வாழ்வின் ஓரம் வந்தாயே, செந்தேனே...!
(இரு)
கண்ணீரே! கண்ணீரே! சந்தோஷக் கண்ணீரே...!
கண்ணீரே...!
தேடித் தேடித் தேய்ந்தேனே,
மீண்டும் கண்முன் கண்டேனே, பெண்ணே பெண்ணே!
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே!
கண்ணே கண்ணே காணாய் கண்ணே!
(கண்ணீரே)
உன் பார்வை பொய்தானா?
பெண்ணென்றால் திரைதானா?
பெண் நெஞ்சே சிறைதானா...? சரிதானா...?
பெண் நெஞ்சில் மோகம் உண்டு,
அதில் பருவத் தாபம் உண்டு,
பேராசைத்தீயும் உண்டு!
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று?
புதிர் போட்ட பெண்ணே நில் நில்!
பதில் தோன்றவில்லை சொல் சொல்!
கல்லொன்று தடைசெய்த போதும்,
புல்லொன்று புதுவேர்கள் போடும்,
நம் காதல் அது போல மீறும்.....
(கல்லொன்று)
(தேடித்)
பால் நதியே நீ எங்கே?
வரும் வழியில் மறைந்தாயோ?
பல தடைகள் கடந்தாயோ? சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு,
என் கண்ணைச் சுற்றும் கனவு,
இது உயிரைத் திருடும் உறவு,
உன் துன்பம் என்பது வரவு,
ஏ மர்ம ராணி நில் நில்!
ஒரு மோக வார்த்தை சொல் சொல்!
உன்னோடு நான் கண்ட பந்தம்,
மண்ணோடு மழை கொன்ட சொந்தம்,
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்!
(உன்னோடு)
(கண்ணீரே)

96. நானே நாதம்..!

சந்தங்களில் வைரமுத்து கட்டிய இன்னொரு கோட்டை இந்தப்பாடல். பாரதிராஜா எழுதிய இன்னொரு உணர்ச்சிக் காவியம், இந்தக் காதல் ஓவியம். இளையராஜாவின் இசை, வார்த்தைகளைத் தாண்டி ஆராதிக்கப்படவேண்டிய ஒன்று!
-----------------------------------------------------
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------
நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்!
பூவில் வண்டு, கூடும் கண்டு, பூவும் கண்கள் மூடும்!
பூவினம் மாநாடு போடும், வண்டுகள் சங்கீதம் பாடும்....!

பூவினம் மாநாடு போடும், வண்டுகள் சங்கீதம் பாடும்....!
(நம்தம் )
(பூவில்)
ராகம் ஜீவனாகும், நெஞ்சின் ஓசை தாளமாகும்!
கீதம் வானம் போகும், அந்த மேகம் பாலமாகும்!
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்...!
நாதம் ஒன்று போதும், எந்தன் ஆயுள் கோடி மாதம்!
தீயில் நின்றபோதும், அந்தத் தீயே வெந்து போகும்!
நானே நாதம்...ஆ...!

தனம்த...
(நம்தம்)
(பூவில்)
வானம் என் விதானம், இந்த பூமி சந்நிதானம்!
பாதம் மீது மோதும், ஆறு பாடும் சுப்ரபாதம்!
ராகம் மீது தாகம், கொண்டு ஆறும் நின்று போகும்!
காற்றின் தேசம் எங்கும், எந்தன் கானம் சென்று தங்கும்!
வாழும் லோகமேழும், எந்தன் நாதம் சென்று ஆடும்!

தனம்த...
(நம்தம்)
(பூவில்)