Thursday, March 29, 2007

110. அவளொரு பைரவி!

ரஜினி என்ற சகாப்தத்தைத் தொடங்கி வைத்தத் திரைப்படத்தில், இன்னொரு சகாப்தமான கமல், திரையில் தோன்றும் பாடல் இது. கண்ணதாசனின் வரிகள் எளிமையான அழகு. M.S.Vஇன் இசை மயக்கும் அழகு. ஜேசுதாசின் குரல் ஆர்ப்பரிக்கும் அழகு.
---------------------------------------
படம் : அபூர்வ ராகங்கள்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : K.J.ஜேசுதாஸ்
---------------------------------------
அதிசய ராகம், ஆனந்த ராகம்
அழகிய ராகம், அபூர்வ ராகம்
(அதிசய)
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த மனதினில் மோகம்
இசை எனும் அமுதினில் அவளொரு பாகம்
இசை எனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்துச் சக்கரவாகம்
(அதிசய)
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி!
அவளொரு பைரவி! அவளொரு பைரவி!

109. ஆதியும் அந்தமும் புரியாமல் காதலில் அரங்கேறும் கலையொன்று!

இளையராஜாவின் இசை ஆளுமையை இந்தப்பாடலில் உணர முடியும். வரிகளில் பிரமாதமாக எனக்கு எதுவும் தெரியவில்லை. பருவத்து உணர்வுகள் எளிமையாக சொல்லப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். எழுதியவர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள்(வாலி என்று நினைக்கிறேன்). ஜேசுதாஸும் ஜானகியும் தங்கள் குரலினால் வசியம் செய்கிறார்கள் இந்தப்பாடலிலும்.
-------------------------------------------
படம் : அக்னி நட்சத்திரம்
இசை : இளையராஜா
வரிகள் :?
குரல் : K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
-------------------------------------------
பெ:
தூங்காத விழிகள் ரெண்டு - உன்
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத)
ஆ:
மாமர இலை மேலே.....ஆ...ஆ...!
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ?
பெ:
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தி தாலாட்டவோ?
ஆ:
நாளும் நாளும், ராகம் தாளம்
சேரும் நேரம், தீரும் பாரம்
பெ:
ஆ...ஆ...ஆ!
(தூங்காத)
பெ:
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ?
ஆ:
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கலையல்லவோ?
பெ:
மாதுளங்கனியாட, மலராட, கொடியாட,
மாருதம் உறவாடும் கலையென்னவோ?
ஆ:
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ?
பெ:
மேலும் மேலும் மோகம் கூடும்
ஆ:
தேகம் யாவும் கீதம் பாடும்
பெ:
ஆ....ஆ......ஆ.....!
(தூங்காத)

Wednesday, March 28, 2007

108. கத்தியில்லாமலே கொய்கிறது பெண்ணின் நினைவு

அமைதியான இசை, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பாடல். நல்ல திரைப்படமும் கூட. நண்பர் ஞானசேகரின் விருப்பப்பாடல் தேர்வில் நான் பதிப்பிக்கும் முதல் பாடல் இது.
என்னைக் கவர்ந்த வரிகள்,
"இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?"

"ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!"

------------------------------------
படம் : அழகிய தீயே
இசை : ரமேஷ் விநாயகம்
வரிகள் : ?
குரல் : ரமேஷ் விநாயகம் & குழு
------------------------------------
ஆ:
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ.....யே!
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ.....யே!
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ.....யே!
(விழிகளின்)
ஆ:
பூ போன்ற கன்னித்தேன்
அவள் பேர் சொல்லித் தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்,
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்,
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும் ஓ.....யே!
கு:
பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!
ஆ:
கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்,
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்,
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது ஓ.....யே!
(விழிகளின்)

Tuesday, March 27, 2007

107. வசந்த கால நதிகளிலே ............ வசந்தகால நீரலைகள்

அற்புதமான ஓர் அந்தாதி! எழுதிய கண்ணதாசன், இசையமைத்த M.S.V, பாடிய ஜெயச்சந்திரன், வாணிஜெயராம், M.S.V, படமாக்கிய பாலச்சந்தர், நடித்த ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்களே!
----------------------------------------------
படம் : மூன்று முடிச்சு
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & M.S.விஸ்வநாதன்
----------------------------------------------
ஜெ:
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

வா:
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

ஜெ:
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

வா:
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

M.S.V:
மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

106. உண்டென்னும் கண்ணும், இல்லையென்னும் இடையும் கொண்டவள்தானே மங்கை!

பழைய திரைப்படப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலை இத்தனை நாட்களாக வலைப்பூவில் ஏற்றாமல் இருந்தேனா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பாடலைக் கேட்கும்போது பின்னணி இசை உயிரை உருக்கிவிடும். அதற்கு மேலாக L.R.ஈஸ்வரியின் குரல். வெறும் Hummingஇலேயே நம்மைக் கட்டிப்போட்டு விடுவார். T.M.Sம் நன்றாகவே பாடியிருக்கிறார். கண்ணதாசன் நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறார்.
------------------------------------------------
படம் : ஆலயமணி
இசை : M.S.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M. செளந்தரராஜன் & L.R.ஈஸ்வரி
------------------------------------------------
ஆ:
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
(கல்)
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா?
(சொல்)
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
(கல்)
பெ:
ஆ......ஆ......ஆ...!
ஆ:
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
(கன்னி)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா? வண்ணக் கண்ணல்லவா?
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா? மின்னல் இடையல்லவா?

(கல்)
பெ:
ஆ......ஆ......ஆ...!
ஆ:
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி, மங்கை அமராவதி,
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி, என்றும் நீயே கதி!
(கல்)