Sunday, February 26, 2006

47.தாய்மடியே!

இந்த வலைப்பூவில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டிருக்கும் இந்தப்பாடலை நான் பதிப்பிக்கக் காரணம், வைரமுத்துவின் வரிகள் மட்டுமே!
-----------------------------------------------
படம் : ரெட்
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
குரல் : திப்பு
-----------------------------------------------
தாய்மடியே! உன்னைத் தேடுகிறேன்!
தாரகையும் உருகப் பாடுகிறேன்!
பத்துத் திங்கள் என்னைச் சுமந்தாயே!
ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே!
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு,
நடுத்தெருவில் கிடக்கிறது பார்த்தாயே!
உதிரம் வெளியேறும் காயங்களில்,
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே!
தெய்வங்கள் இங்கில்லை... உன்னை அழைக்கிறேன்.
(தாய்மடி)
விண்ணை இடிக்கும் தோள்கள்,
மண்ணை அளக்கும் கால்கள்,
அள்ளிக் கொடுத்த கைகள்... அசைவிழந்ததென்ன?
கனல்கள் தின்னும் கண்கள்,
கனிந்து நிற்கும் இதழ்கள்,
உதவி செய்யும் பார்வை... உயிர் துடிப்பதென்ன?
பாரதப் போர்கள் முடிந்த பின்னாலும்,
கொடுமைகள் இங்கே குறையவில்லை!
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்,
சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை!
(தாய்மடி)
படை நடத்தும் வீரன்,
பசித்தவர்கள் தோழன்,
பகைவருக்கும் நண்பன்... படும் துயரமென்ன?
தாய்ப் பாலாய் உண்ட ரத்தம்,
தரை விழுந்ததென்ன?
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன?
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி,
தேர்களில் ஏறி வருவதென்ன?
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி,
தாமதமாக வருவதென்ன?
(தாய்மடி)

Thursday, February 23, 2006

46. அவளின் சிரிப்புக்குள் சிறைப்படுவதே ஆனந்தம்

நல்ல பாடலாசிரியர்கள் நிறைய பேர் தமிழ்த்திரையுலகில் இருக்கிறார்கள் என்பதை இது போன்ற பாடல்கள் தெரியப்படுத்துகின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் புதுமையான இந்த மெட்டுக்கு அருமையான வரிகளைக் கொடுத்த பாடலாசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும். ஷங்கர் மகாதேவனின் குரல் இந்தப் பாடலுக்கு, மேலும் மெருகூட்டுகிறது.
------------------------------------------------------
படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : காமகோடியான்
குரல் : ஷங்கர் மகாதேவன்
-------------------------------------------------------
என் அன்பே! என் அன்பே!
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி!
என் அன்பே! என் அன்பே!
என் நெஞ்சுக்குள் காதல் வலி!
என் உடலின்று கடலானதே!
என் உயிருக்குள் அலையாடுதே!
இந்தப் பாறைக்குள் பனி பாய்ந்ததே!
என் விரதத்தில் விளையாடுதே!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே)
விழி பட்ட இடம் இன்று, உளி பட்ட சிலையாக,
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி!
புது பார்வைப் நீ பார்த்து, புது வார்த்தை நீ பேசி,
இதயத்தை இடம் மாறச் செய்தாயடி!
மெல்லிடை கொண்டு நடைகள் போடும்,
அழகான பெண்ணே!
முப்படை கொண்டு எனைச் சுற்றி வளைத்தாயடி!
என் உறக்கத்தைத் திருடிச் சென்று,
உறவாடும் பூவே!
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்!
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்!
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்!
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்!
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு,
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே...!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே)

45. என்ன விலை அழகே?

இசையினாலேயே மாபெரும் வெற்றியைப் பெற்றத் திரைப்படம் இது. எதுகை, மோனை, இயைபு எல்லாவற்றிலும் வல்லவரான வாலியின் திறமை இந்தப் பாடலிலும் நன்கு தெரியும். வயது ஏற ஏற, இவரின் கவித்திறன் கூடுகிறது என்று கூடச் சொல்லலாம்.

"பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று!"

"உன் புகழ் வையமும் சொல்ல,
சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல!"

இவை எனக்குப் பிடித்த வரிகள்...
------------------------------------------------------
படம் : காதலர் தினம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வாலி
குரல் : உன்னி மேனன்
------------------------------------------------------
என்ன விலை அழகே?
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல் மெளனமாகிறேன்.
(என்ன)
படைத்தான் இறைவன் உனையே!
மலைத்தான் உடனே அவனே!
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது, என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன் மேனி, மீட்டட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு!
விரல் பட மெல்ல கனிந்திடு!
உடல் மட்டும் இங்கு கிடக்குது!
உடன் வந்து நீயும் உயிர் கொடு!
பல்லவன் சிற்பிகள் அன்று,

பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று! சிலையே!
(பல்லவன்)
உந்தன் அழகுக்கில்லை ஈடு!
(என்ன)
உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க, நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு, ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே!
உனைவிட இல்லை புதுமையே!
உன் புகழ் வையமும் சொல்ல,

சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல! உயிரே!
(உன் புகழ்)
உனை நானும் சேரும் நாள் தான்!
(என்ன)

44.காத்திருக்கிறேன்...நிலமாக...!வருவாயா மழையாக...?

இந்தப் பாடலைப் பாடிய உமாரமணனைப் பெரும்பாலான இளைய தலைமுறையினருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். இவர் சன்.டி.வி யில், "சப்த ஸ்வரங்கள்" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரமணனின் மனைவி. 80 களில் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்தவர். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை.
---------------------------------------------------------
படம் : தென்றலே என்னைத் தொடு
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : K.J.ஜேசுதாஸ்& உமா ரமணன்
---------------------------------------------------------
பெ:
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே...!
ஆ:
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் என்னருகே...!

(கண்ணனே)
ஆ:
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா? மீனா?
பெ:
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
(நீலம்)
ஆ:
கள்ளிருக்கும்
பெ:
பூவிது பூவிது
ஆ:
கையணைக்கும்
பெ:
நாளெது நாளெது
ஆ:
பொன்னென மேனியும்
பெ:
மின்னிட மின்னிட
ஆ:
மெல்லிய நூலிடை
பெ:
பின்னிட பின்னிட
ஆ:
வாடையில் வாடிய
பெ:
ஆடையில் மூடிய
ஆ:
தேர்..
பெ:
நான்.. .
(கண்மணி)
ஆ:
ஆசை தீர பேச வேண்டும். வரவா? வரவா?
பெ:
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா! மெதுவா!
(ஆசை)
ஆ:
பெண் மயங்கும்
பெ:
நீ தொட நீ தொட
ஆ:
கண்மயங்கும்
பெ:
நான் வர நான் வர
ஆ:
அங்கங்கு வாலிபம்
பெ:
பொங்கிட பொங்கிட
ஆ:
அங்கங்கள் யாவிலும்
பெ:
தங்கிட தங்கிட
ஆ:
தோள்களில் சாய்ந்திட
பெ:
தோகையை ஏந்திட
ஆ:
யார்...?
பெ:
நீ....!
(கண்மணி)

Wednesday, February 22, 2006

43. தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம்!

இளையராஜாவை ரசிக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடலாக இது இருக்கும் என நம்புகிறேன். மிகச்சிறந்த வரிகள். ஜேசுதாஸின் குரலில் அருமையான பாடல். நன்றாகப் படமாக்கிய பாலச்சந்தரையும் பாராட்டியே ஆக வேண்டும். இவருக்குக் கடல் மீது அப்படி என்ன காதலோ? இந்தப் படத்திற்காக, இளையராஜா, சித்ரா, சுகாசினி ஆகியோர் தேசிய விருது பெற்றனர். பாடலை வேண்டிய சேகருக்கு நன்றி..!
----------------------------------------------------------------
படம் : சிந்து பைரவி
இசை: இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------------
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.
மனதில் உனது ஆதிக்கம்,
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.
விரகம் இரவை சோதிக்கும்,
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!
காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!

தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்த தொம்தனன

தொம்தன தனனன....
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!

தொம் தொம் தொம் தொம் தொம் தொம் தன தொம்...!
தொம்தன தன தொம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!
ஆ......!

Monday, February 20, 2006

42.மகாநதி.... கண்ணீரோடு....

கமல் ஹாசனின் வித்தியாசமான குரலோடு ஒலிக்கும் இந்தப் பாடல், திரைப்படத்தின் முதலில் வரும் "தைப்பொங்கலும் வந்தது" என்ற சந்தோஷமான பாடலின் மெட்டிலேயே அமைந்து, அதே நேரம் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது! இந்தப் பாடலை பதிப்பிக்குமாறு கேட்டு, பின் வரிகளையும் எழுதியனுப்பிய நண்பன் சேகருக்கு நன்றி...!
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரென்று தெரிந்தால் யாரேனும் சொல்லுங்கள்.
----------------------------------------------------------------
படம் : மகாநதி
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : கமல்ஹாசன்
----------------------------------------------------------------
எங்கேயோ திக்குதெச காணாத தூரந்தான்.
எம்மாடி வந்ததென்ன தென்னாட்டின் ஓடம்தான்.
காவேரி தீரம்விட்டு கால்கள் வந்ததடி!
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி!
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனதே!
கண்ணார நானும் காண இத்தனைநாள் ஆனதே!

இது கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி!

பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி!
நான் கங்கா நதியைக் காணும் பொழுது உண்மை விளங்குது!
இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது!
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது!
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது?

Sunday, February 19, 2006

41.நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை!

S.P.பாலசுப்ரமணியத்திற்கு, சிறந்த பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுத் தந்த பாடல் இது. இவர் மட்டுமல்லாது, A.R.ரஹ்மான், சித்ரா, வைரமுத்து, பிரபு தேவா ஆகியோரும் இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்றனர். A.V.M.தயாரிப்பு நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், A.R.ரஹ்மான், வைரமுத்து கூட்டணிக்கு ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
------------------------------------------------------------------------
படம் : மின்சாரகனவு
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------------------
தங்கத் தாமரை மகளே! வா அருகே!
தத்தித் தாவுது மனமே! வா அழகே!
வெள்ளம் மன்மத வெள்ளம்.
சிறு விரிசல் கண்டது உள்ளம்.
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே!
(தங்கத் தாமரை)
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே!
என்கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே!
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே!
உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே!
இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க,
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க?
தொடட்டுமா தொல்லை நீக்க?
(தங்கத் தாமரை)
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்!
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்!
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்!
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்!
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை!
நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை!
நெருக்கமே காதல் பாஷை!
(தங்கத் தாமரை)

Friday, February 17, 2006

40.மோகத்தில் தவிக்கும் இரு காதல் மேகங்கள்.

இந்தப் பாடலுக்குக் கவிஞர், முதலில் எழுதிய பல்லவி,
"திராட்சை ரசம் வழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது" என்பது! பின் என்ன காரணத்தாலோ வரிகள் மாற்றப்பட்டன. இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் வந்த பல பாடல்களில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததொரு பாடல் இது.....! இந்தக் கூட்டணி பிரிந்ததில் ரசிகர்களுக்கே அதிக இழப்பு என்பது நிதர்சனமான உண்மை...!
----------------------------------------------------------
படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------------
ஆ:
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
(அந்தி)
பெ:
தேனில் வண்டு மூழ்கும்போது,....
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!
ஆ:
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
(அந்தி)
ஆ:
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!
பெ:
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
(அந்தி)
பெ:
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
(அந்தி)

39.பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை பேசுகிறது!

படம் : சொல்ல(த்) துடிக்குது மனசு
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
பூவே! செம்பூவே! உன் வாசம் வரும்!
வாசல், என் வாசல், உன் பூங்காவனம்!
வாய் பேசிடும், புல்லாங்குழல்!
நீதானொரு பூவின் மடல்!
(பூவே)
நிழல் போல நானும், நடை போட நீயும்,
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்!
கடல் வானம் கூட, நிறம் மாறக் கூடும்,
நான் கொண்ட பாசம், தடம் மாறிடாது!
நான் வாழும் வாழ்வே, உனக்காகத்தானே!
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே!
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்!
(பூவே)
உனைப்போல நானும், ஒரு பிள்ளை தானே!
பலர் வந்து கொஞ்சும், கிளிப் பிள்ளை நானே!
உனைப்போல நானும், மலர் சூடும் பெண்மை!
விதி என்னும் நூலில், விளையாடும் பொம்மை!
நான் செய்த பாவம், என்னோடு போகும்!
நீ வாழ்ந்து நான்தான், பார்த்தாலே போதும்!
இந்நாளும், எந்நாளும், உல்லாசமே!
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்!
(பூவே)

Thursday, February 16, 2006

38.இயற்கையோடு பயணம் முடிவதில்லைதான்.....

படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்

-----------------------------------------------------------
இளைய நிலா பொழிகிறது! இதயம் வரை நனைகிறது!
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே! விழாக்காணுமே!
வானமே!
(இளைய நிலா)
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.
வான வீதியில் மேக ஊர்வலம்!
காணும்போதிலே ஆறுதல் தரும்!
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!
(இளைய நிலா)
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!
நீல வானிலே வெள்ளி ஓடைகள்!
ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்!
விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?
(இளைய நிலா)

Monday, February 06, 2006

37.தகனம் நடக்கும் இடத்தில் ஜனனம் கண்டவன் இவன்...!

படம் : பிதாமகன்
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------------
அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே,
அழிக்கும் அதிகாரம் இவருக்கு தந்தவன் எவன் இங்கே?
விடவா? இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா?

முடமாய் முடங்காது மூர்க்கர் இவர் தம்மை முடித்திடவா?
மனிதகுலத்தின் துணையோடி

மனதை அறுக்கும் ரணமெல்லாம்,
இனியும் வருத்த விட மாட்டேன்,
தனியனாக அறுத்தெறிவேன்!
தகனம் நடக்கும் இடத்தில் எனது
ஜனனம் என்று புரிந்து கொள் மனிதா!
(அடடா அகங்கார)
வறுமை துரத்த வாழ்க்கையும் துரத்திட,
வறண்டு போன மனிதனும் துரத்துவதோ!
பரிவில்லாத பாவிகள் துரத்திடப்
பதுங்கிப் பதுங்கிப் பகைவரும் துரத்துவதோ!
அந்தரி! வாராகி! சாம்பவி! அமர சோதரி!

அமல ஜெகஜ்ஜால சூலி! சுந்தரி! நிரந்தரி! துரந்தரி!
வனராஜ சுகுமாரி! கௌமாரி!
இரங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது,

நெருப்புக் கனலில் கீதையைக் காத்திடவே!
தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது,
துரோகக் கூட்டம் தொலைவதைப் பார்த்திடவே!

வையமே! வானமே! வாழ்த்திடு!
தீயவை யாவையும் மாய்த்திடு!
நாளை உலகில் நல்ல மனிதன் தோன்றட்டுமே!
(அடடா அகங்கார)
காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ?
கடலில் ஆடும் அலைகளைத் தடுப்பதுண்டோ?
ஆற்றைத் திருப்பச் செய்பவன் உண்டோ?
நேற்றை நிறுத்திப் பிடித்தவன் எவரும் உண்டோ?
பொறியரவ முடித்தவனே!

நெருப்பு விழி துடிப்பவனே!
கரித்தோலை உடுப்பவனே!
புலியாடை உடையவனே!
சுடுகாடு திரிபவனே!
திரிசூலம் தரிப்பவனே!
ஏழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது,

இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே!
பிடிபடாத பேயர்கள் எல்லாம்,
பொடி பொடிக்கக் கரங்கள் துடிக்கிறதே!
தடுப்பவன் எவனடா? திறமுடன்

தாண்டிவா! எல்லையை, எனைத் தொட,
ஒருவன் இல்லை, இருவன் இல்லை, எவனும் இல்லையே...!
(அடடா அகங்கார)

36.வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
---------------------------------------------------------------
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே!
மலரே சோம்பல் முறித்து எழுகவே!
குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கத கதப்பில்,
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்.....
(வெள்ளை)
காற்றின் பேரிசையும், மழை பாடும் பாடல்களும்,
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ?
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்,
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ?
(வெள்ளை)
எங்கு சிறு குழந்தை, தன் கைகள் நீட்டிடுமோ,
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ,
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!
(வெள்ளை)

Thursday, February 02, 2006

35.மெய் என்று மேனியை யார் சொன்னது?

படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------------
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!

Wednesday, February 01, 2006

34.எல்லாம் தெளிந்த மனிதன்(??!!) இவன்...

படம் : பிதாமகன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : மது பாலகிருஷ்ணா
------------------------------------------------------------------------
பிறையே! பிறையே! வளரும் பிறையே! இது நல்வரவே!
மலரே! மலரே! மலர்ந்தாய் மலரே! உனக்கேன் தளர்வே!
பயணம், எவர்க்குமிங்கு முடியும், இங்கு பிறந்தாயே!
உதயம், உனக்கு இங்கு தொடக்கம், விழிகள் திறந்தாயே!
(பிறையே)
தன்னந்தனியனாக, மண்ணில் வர ஏங்கினாயோ?
என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ?
சோலையில் நின்ற போதிலும்,
அது பாலையே என்ற போதிலும்,
பூவெல்லாம் என்றும் பூக்களே!
இங்கு மாறுமா அதன் பெயர்களே?
குடிசை என்ன செய்யும்? கோட்டை என்ன செய்யும்?
உன்னை மாற்றுமா?
(பிறையே)
ஊர்வலங்கள் எல்லாம், வரும் உன்னை நோக்கித்தானே!
ஊரும் உறவும் ஏது? எல்லாம் உனக்கொன்றுதானே!
பணத்திலே தினம் புரண்டவர்,
பெரும் பதவியில் தலை கனத்தவர்,
புகழிலே எல்லை போனவர்,
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்!
இந்த பேதமெல்லாம் வெந்து போகக்கண்டு,
தெளிந்த மனிதன் நீ!
(பிறையே)

33.மனம் போல் கொண்டாடலாம்!

படம் : அடுத்த வாரிசு
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
குரல் : மலேசியா வாசுதேவன்
----------------------------------------------------------------
ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை, வா!
போதும் போதும் என, போதை சேர்ந்து வர, வா!
தினம் ஆடிப் பாடலாம், பல ஜோடி சேரலாம்!
மனம் போல் வா கொண்டாடலாம்!
மனம் போல் வா கொண்டாடலாம்!
(ஆசை)
முத்துரதம் போல சுற்றி வரும் பெண்கள்,
முத்தமழை தேனாக..!
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம்,
உள்ளவரை நீ ஆடு!
ஆகா பெண்கள் நாலு வகை, இன்பம் நூறு வகை, வா...!
தினம் நீயே செண்டாகவே, அங்கு நான் தான் வண்டாகவே!
(ஆசை)
என்ன சுகம் தேவை? எந்த விதம் தேவை?
சொல்லித் தர நானுண்டு!
பள்ளியிலே கொஞ்சம், பஞ்சணையில் கொஞ்சம்,
அள்ளித்தர நீயுண்டு!
அந்த சொர்க்கம் மண்ணில் வரும், சொந்தம் கண்ணில் வரும் வா..!
தினம் நீயே செண்டாகவே, அங்கு நான் தான் வண்டாகவே!
(ஆசை)